உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 1972, அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதை நிறுத்தி, அரசாங்கத்துக்கும் சூதாட்ட மன்னர் பால் புவாவுக்குமிடையில் உள்ள தொடர்புகளில் அடங்கியுள்ள “மிகப் பெரிய இரகசியம்” என்னவென்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என பாஸ் கூறியுள்ளது.
“இந்த விவகாரத்தில் அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
“இது ஓஎஸ்ஏ பாதுகாப்புப் பெற்ற ‘மிகப் பெரிய இரகசியம்’ என்ற சாக்குபோக்கெல்லாம் வேண்டாம்”, என பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஓஎஸ்ஏ ….. யாரை பாதுகாக்கிறது? அப்புறம் ஏன் இந்த கேள்வி ?
போடா புண்ணாக்கு .
உள்துறை அமைச்சனின் அந்த சூதாட்ட மன்னனை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கை என்பது இந்த நாட்டிற்கே ஒரு பெருத்த அவமானம். உண்மையில் தேச நிந்தனை சட்டம் இவன் மேல் பாய்வதுதான் பொருத்தமானது. பாயுமா?
முற்றாக நனைந்து விட்ட பிறகு மூடிக் கொள்ள எதுவும் இல்லை என்பதால், அதிகாரத்துவ இரகசிய சட்டத்தைக் கொண்டு மூடிக் கொள்ளப் பார்கின்றார் போலும். மானம் கெட்ட பொழப்பு இது.