முன்னாள் நிதி அமைச்சர் டாயம் ஸைனுடின் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி தம்மிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கேட்டுக் கொண்டால் அதனிடம் தெரிவிப்பேன் என்று இன்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
டாயம் சொத்து சேர்த்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அரசாங்க ஆதரவு ஊடகங்கள் கூட அவரைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுகின்றன. சமீபத்தில் டாயம் பிரதமர் நஜிப்பின் கொள்களைக் குறைகூறிந்ததைத் தொடர்ந்து அவரைப் பற்றி எழுதப்படுகிறது.
டாயம்மை விசாரிக்க எம்எசிசி முடிவு செய்தால் அதனுடன் ஒத்துழைக்க விரும்புவதாக அன்வார் மேலும் கூறினார்.
“அவர்கள் என்னை அழைத்தால் நான் நிச்சயமாக ஒத்துழைப்பேன். உண்மையில், என்னிடம் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன”, என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
என்ன ஆதாரத்தை யாரிடம் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. ஆட்சி மாறி உண்மையான அரசு நடந்தால் தான் ஏதும் செய்ய முடியும். இந் நாட்டில் அதனால் பாதிப்புக்கு பலர் ஆகலாம் அதனால் எல்லா தில்லுமுல்லும் செய்து ஆட்சியை அவன்கள் கையில் வைத்திருக்கவே எல்லாம் நடக்கும்.
ஆதாரம் அன்வர் ஆயுதம். அவர் கொடுப்பாரா……
இவரையெல்லாம் ஒரு பெரிய தொழில் அதிபராக ஒரு காலத்தில் ‘ஆகா! ஓகோ!’ என்று புகழ்ந்து தள்ளினார்கள்! கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் எல்லாம் மகாதிர் காலத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவனை எல்லாம் தொழில் அதிபர் என்று படம் காட்டினார்கள். அப்போதும் எங்களுக்குப் புரிந்தது! இப்போதும் எங்களுக்குப் புரிகிறது. ஆஸ்திரேலியாவில் தொழில் செய்கிறேன் என்று சொன்னால் மட்டும் தொழில் அதிபர் ஆகிவிட முடியுமா!