அனைத்துலகக் கள்ளச் சூதாட்ட குண்டர் கும்பலின் பெரும்புள்ளியான பால் புவாவுடன் மலேசியா மேற்கொண்டிருக்கும் தேசிய பாதுகாப்பு திட்டங்கள் என்ன என்பதை உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் சார்பில் அமைச்சரவை விளக்க அளிக்க வேண்டும் என்று டிஎபியின் லிம் கிட் சியாங் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து எந்தத் தகவலையும் அதிகாரத்துவ ரகசியச் சட்டம் 1972 இன் கீழ் வெளியிட முடியாது ஏனென்றால் அது ஒரு “பெரிய ரகசியம்” என்று ஸாகிட் கூறியிருந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையை லிம் முன்வைத்துள்ளார்.
கடந்த காலத்தில் புவா சம்பந்தப்பட்ட “தேசிய பாதுகாப்பு திட்டங்கள்” ஏதேனும் இருந்தனவா, எத்தனைத் திட்டங்கள் இருந்தன, ஏன் போலீஸ்சுக்கு அது குறித்து எதுவும் தெரியவில்லை என்பதை அமைச்சரவை மலேசியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்”, என்று லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு திட்டங்கள் என்று கூறப்படுபவை ஸாகிட் உள்துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டதா அல்லது அவருக்கு முன்னர் அப்பதவிலியிருந்த ஹிசாமுடின் ஹுஸேன் காலத்தில் நடந்ததா என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று லிம் மேலும் கூறினார்.