மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) போன்ற அரசாங்க அமைப்புகள் ஜிகாட் என்றால் என்ன என்பதையும் ஷரியா சட்டங்களையும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார்.
இன்று டாதாரான் பிரதானாவில் அரசாங்க ஊழியர்களின் மாதாந்தர சந்திப்பில் பேசிய நஜிப் முஸ்லிம்கள் “எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது” என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிறது என்றார்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் அரசாங்கம் தாக்கல் செய்யவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு முன்னோடியாக அமைகிறது நஜிப் தெரிவித்துள்ள இக்கருத்து.
அதிகமான மலேசியர்கள் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பிலும் மத்திய கிழக்கிலுள்ள இதர ஜிகாட் இயக்கங்களிலும் சேர்ந்து வருகின்றனர். இது இந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாக அமையக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வணக்கம்.நல்ல கருத்துதான்.
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதில் வல்லவர்கள் இந்த அம்னோகாரர்கள். நம் நாட்டில் இன பிரச்சனைக்கு மூலமாக இருக்கும் பெர்காசா அமைப்பை நஜீப் சாடியதாக தெரிய வில்லையே! ஜிகாட் என்றால் என்ன என்று தெரியாமலா மேடைகளில் “கூவி”க் கொண்டிருக் கிறார்கள்? 2015 ஆம் ஆண்டின் முதல் நிலை “ஜோக்” இதுதான்.
அதென்ன, மற்ற நாடுகள் இவர்களை “தீவிரவாதிகள்” என்று கூறும்போது, நீங்கள் மட்டும் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) “அமைப்பு” என்றும் ஜிகாட் “இயக்கம்” என்று குறிப்பிடுகிறீர்கள்.
“தீவிரவாதிகள்” என்று கூற பயப்படும் நீங்கள் “பயங்கரவாத எதிர்ப்பு மசோதா” தாக்கல் செய்து என்ன புடுங்க போகிறீர்கள் ?
சமயத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே சமய அரசியல் நடத்தினால், அரசாங்கத்திற்கு எதிர்மறையான ஜிகாட் வரும் என்று பயப்படுகிண்றீர்களோ என்ற டவுட் எனக்கு வருது.