மலேசியாவுக்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார் மேஜர் ஜைடி. ஆனால், ஆளும் கட்சியின் நன்மையைக் கருதி மோசடி நடைமுறைகளைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க முடியாது.
நாட்டுக்கு விசுவாசமாக இருக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டது உண்டு என்று கூறும் அரச மலேசிய ஆகாயப்படை விமானியான மேஜர், அம்னோவுக்கு விசுவாசமாக இருத்தல் என்பது அதன் பொருளல்ல என்கிறார்.
“நாட்டுக்குத்தான் பற்றுறுதியுடன் இருப்பதாக உறுதி கூறினோம். அம்னோவுக்கு அல்ல”, என மலேசியாகினி நேர்காணலில் அவர் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது நிகழ்ந்த அழியா மை குளறுபடி பற்றிக் கருத்துரைத்தபோது ஜைடி அவ்வாறு கூறினார்.
அரசாங்கத்துக்கு விசுவாசத்துடன் இருப்பதும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதும் ஒன்றுதான் என்று இராணுவ அதிகாரிகளுக்குப் புகட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தம்மைப் போல் அதற்கெதிராக செயல்படுபவர்கள் விசுவாசமற்றவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள் என்றாரவர்.
இராணுவத்தில் இப்படியே பலர் சொல்ல ஆரம்பிச்சுட்டா அம்னோ அரசாங்கம் கோவிந்தா!, கோவிந்தா!.
இதுதான் உண்மை குடிமகன்.
மேஜர் ஜைடி அவர்களுக்கு பாராட்டுக்கள், இவர்தான் உண்மையான நாட்டுப்பற்று உடையவர்.
இந் நாட்டில் அரசு சம்பந்த பட்ட எல்லாமே இக்கதியை தான் எதிர்கொண்டிருக்கின்றன.
மேஜர் ஜைடி அவர்களுக்கு பாராட்டுக்கள்.