டாக்டர் மகாதிர் முகம்மட், வலச் சாரி இயக்கமான பெர்காசாவுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை மறுத்துள்ளார்.
“நான் பெர்காசாவைவிட்டு விலகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், நான் முறைப்படி அதில் இணைந்திருக்கவில்லை.
“ஆனாலும், அவர்களின் கருத்துகளை, குறிப்பாக, மலாய்க்காரர்-அல்லாதாரின் தீவிரவாத கருத்துகளுக்கு அவர்களின் எதிர்வினைகளை ஆதரிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”, என மகாதிர் அவரின் வலைப்பதிவில் கூறியுள்ளார்.
“மலாய்க்காரர்-அல்லாதாரின் தீவிரவாத கருத்துகளுக்கு அவர்களின் எதிர்வினைகளை ஆதரிக்கிறேன்” என்ற மாமக்தீரின் கருத்து, கூத்தாடியோடு சேர்ந்து கும்மாளம் அடிப்பதர்க்குச் சமம். ஒரு முன்னாள் பிரதம மந்திரி என்பவர் வெவ்வேறு தரப்பினரிடம் இருக்கும் தீவீரவாதப் போக்கை களைவதற்கு வழிகாட்ட வேண்டுமே ஒழிய அவர்களோடு சேர்ந்துக் கொண்டு எரியும் நெருப்பில் எண்ணெய்யை விடக்கூடாது. வயதானக் காலத்தில் அவருக்கு புத்தி பேதலித்து விட்டது போலும்.
இவனெல்லாம் ஒரு பெரிய மனுசனா..? பூனையை மடியிலே கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதைதான்…!!!
ஒப்புக்கு சித்தப்பா உப்பை போட்டு நக்கப்பானானாம்
ஒரு மாமாக் ஹிரோ ஆகிறார்!
இவனைப்பற்றி நான் பலமுறை கூறியிருக்கின்றேன் — அவனின் MALAY DILEMMA புத்தகத்தை படித்தால் புரியும். அது 1967ல் எழுதப்பட்டது. அவனின் மட்ட ரக புத்தி அதில் தெரிய வரும்– ஆனால் அதில் எழுதியிருந்ததை எல்லாம் பதவிக்கு வந்த உடன் செயல் படுத்தினான். அதன் பின் விளைவுகள் தான் இப்போது நடப்பவை எல்லாம். சூடு சொரணை அற்ற MIC MCA ஜென்மங்கள்.
ஒன்று புல்டொக் இன்னொன்று குள்ளநரி