பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 2015 பட்ஜெட்டில் மிகப் பெரிய தொகை துண்டு விழுவதைச் சரிக்கட்ட கடன் வாங்கக், கூடாது என்றும் கடன்சுமையை நாடு தாங்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக எண்ணெய் விலை வீழ்ச்சி, ரிங்கிட் மதிப்பு குறைந்தது, வெள்ளப் பேரிடர் செலவு ஆகியவற்றால் பட்ஜெட்டில் ரிம25 பில்லியன் ரிங்கிட் துண்டு விழலாம் என பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின் கூறினார்.
“நாளை நாட்டுக்குச் சிறப்பு விளக்கமளிக்கும்போது பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகையை பிரதமர் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
“இப்படிப்பட்ட நெருக்கடியான பொருளாதார நிலைமையில் பட்ஜெட் குறைபாட்டைச் சரிசெய்ய இரு வழிகள் உள்ளன: செலவைக் குறைப்பது அல்லது கூடுதலாக கடன் வாங்குவது.
“கூடுதல் கடன் வாங்குதல் வேண்டாம் என பிகேஆர் அரசாங்கத்தை எச்சரிக்கிறது”, என பிகேஆர் வியூக இயக்குனருமான சிம் ஒர் அறிக்கையில் கூறினார்.
அட, அமெரிக்காவே பல திரில்லியனுக்கு கடன் வாங்கி கவலை இல்லாமல் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். நம்ப கடன் என்ன ஜுஜுபி!. இதற்குப் போய் கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்க நம்ம அரசியல்வாதிகளுக்கு நெஞ்சமும் இல்லை, பணத்திற்குப் பஞ்சமும் இல்லை. இருக்கவே இருக்கு ஊழியர் சேமிப்பு நிதி. எடுத்து ஈடு கட்டிட்டா இப்ப பிரச்சனை தீர்ந்து விடும். அடுத்து எவன் வந்து, அவன் நெஞ்சு கலங்கினா நமக்கு என்னவென்றுதானே இப்ப அரசாங்கம் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கு.
நாட்டிற்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்,
நாட்டுமக்கள் உழைத்து எப்படியாவது ஒருவகையில் சிக்கனமாக வாழ்ந்துக்கொள்வார்கள்,ஆனால் அரசியல்வாதிகளின் நிலைமை?
முதல் வழி நாட்டு கடனை உயர்த்துவது இரண்டாவது வழி மக்களின்வரியை உயர்த்துவது.
ஊழியர் சேமநிதியில் ஏற்கனவே ‘கை’ வைத்து விட்டதாகக் கேள்வி. கூடுதலாகக் கடன் வாங்கினால் அது அம்னோவினருக்குப் போய் சேரும். அதனால் கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.