அதிர்ச்சிதரும் வகையில் வீழ்ச்சி கண்டிருக்கும் உலக எண்ணெய் விலைகளைச் சமாளிக்கும் புதிய வழிமுறைகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாளை அறிவிப்பார்.
கடந்த சில மாதங்களில் எண்ணெய் விலை பாதியாகக் குறைந்துள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் குறைந்திருப்பது பயனீட்டாளர்களுக்கு நல்ல செய்திதான். ஆனால், அது நாட்டின் வருமானத்தைப் பாதிப்பதுதான் வருத்தந் தரும் செய்தியாகும். நம் நாட்டின் வருமானம் பெருமளவு எண்ணெயை நம்பியுள்ளது.
“நாளை இந்நிலைமையைச் சரிசெய்யும் வழிமுறைகளை அறிவிப்பேன். நாம் முனைப்புடன் செயலாற்ற வேண்டியுள்ளது”, என இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் நஜிப் கூறினார்.