டிவி 3 அன்வாருக்கு இடமளிக்கிறதே என சைபுல் ஆத்திரம்

saiஎதிரணித்  தலைவர் அனவார்  இப்ராகிம்  அடிக்கடி  டிவி3-இல்  வருவதைக்  கண்டு  அவரின்  முன்னாள்  உதவியாளர்  சைபுல்  புகாரி   அஸ்லான்  எரிச்சலடைந்திருக்கிறார்.

முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின் மீது  பிகேஆர்  நடத்தும்  தாக்குதல்கள்  பற்றிய  செய்திகளுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என்று  டிவி3  “பெரிய  போஸ்”  உத்தரவிட்டிருப்பதாக சைபுல், இன்று  தம்  வலைப்பதிவில்  தெரிவித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட  செய்திகளைக் “கண்டிப்பாக  சேகரித்துப் பயன்படுத்த  வேண்டும்” என்று  டிவி3 முன்னாள்  பணியாளரான  சைபுலின்  மனைவியான  சூர்யானி  மேகாட்டுக்குக்கூட  உத்தரவிடப்பட்டிருந்ததாம்.

“ஒரு  தடவை  நடக்கும்  என்று  பார்த்தால்  அடிக்கடி  நடக்கிறது”, என  அன்வாருக்கு  அடிக்கடி  டிவி3-இல்  இடமளிக்கப்படுவதாக  சைபுல்  கூறினார்.

டயிம்  அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்திப்  பெரும்  பணம்  சம்பாதித்தார்  என்பதைக்  காண்பிக்கும் “வலுவான  ஆதாரம்” தம்மிடம்  இருப்பதாக  அன்வார்  கூறியுள்ள  செய்தி  தொடர்பில்தான்  சைபுல்  இவ்வாறு  கூறினார்.

அச்செய்தி டிவி3-இல்  மட்டுமல்லாமல்  உத்துசான்  மலேசியா, நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  போன்ற  அம்னோ-தொடர்பு  ஊடகங்களிலும்  வெளியிடப்பட்டிருந்தது.

டயிம்மீது  டிவி3  தாக்குதல்  தொடுப்பது  பற்றி  சைபுல் கேள்வி  கேட்கவில்லை. இவ்விசயத்தில்  பிகேஆருக்கு  முக்கியத்துவம்  கொடுப்பது  ஏன்  என்பதுதான்  அவருடைய  கேள்வி.

“நம்மவர்களில்  (டயிமின் தவறுகளை)  வெளியிடும் துணிச்சல்  யாருக்கும் இல்லையா?

“அன்று (பிகேஆர் உதவித்  தலைவர் இஸ்கண்டர்  முகம்மட்  அகின். இன்று  அன்வார்”, என்றாரவர்.

இதுதான்  தம்  மனைவி  பரஸ்பர பணிஓய்வுத்  திட்டத்தை  ஏற்று  டிவி3-இலிருந்து  விலகியதற்கும்  காரணமாகும்  என்று  சைபுல்  தெரிவித்தார்.