மின்கட்டணத்தைக் குறைப்பீர்: பிகேஆர் கோரிக்கை

tzeபிகேஆர், இவ்வாண்டில்  மின்கட்டண  உயர்வு  இல்லை  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அறிவித்திருப்பதை  ஏளனம்  செய்துள்ளது. எண்ணெய்  விலை  படுவீழ்ச்சி  கண்டுள்ள  வேளையில்   மின்கட்டணத்தைக்  குறைக்காமல்  கட்டண  உயர்வைத்  தள்ளி  வைப்பதாகச்  சொல்வது   என்ன  நியாயம்  என்று  அது கேட்கிறது.

“பிரதமர்  மின்கட்டணத்தை  உடனடியாகக்  குறைக்க  வேண்டும். உயர்வைத்  தள்ளி வைப்பதாகச்  சொல்லக்கூடாது.

“உலக  எண்ணெய், எரிவாயு  விலைகள்  50  விழுக்காடு  குறைந்துள்ள  வேளையில்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  போன்ற   சுயேச்சை  மின்  உற்பதியாளர்களை( ஐபிபி)த்  தொடர்ந்து  பாதுக்காப்பதில்  அர்த்தமில்லை.

“நடப்பு  மின்கட்டணத்தை  அப்படியே  வைத்திருப்பது  ஐபிபிகள்  கொள்ளை  லாபம்  பெறுவதற்கு  மட்டுமே  உதவும்”, என  பிகேஆர்  வியூக இயக்குனர்  சிம்  ட்ஸே  ட்ஸின்  கூறினார்.