சிருல் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்

 

sirul1மங்கோலிய பெண் அல்தான்துயாவை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான சிருல் அஸ்ஹார் உமார் ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார்.

இண்டர்போல் சிருலின் பெயரை சிவப்பு நோட்டீஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக எபிசி செய்தி அறிவித்தது.

சிருல் தற்போது ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று எபிசியின் இன்றைய காலைச் செய்தி கூறிற்று.

சிருல் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று விட்டார். அந்நாட்டின் சட்டப்படி மரணை தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒருவரை அவரின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது.

அல்தான்துயாவை கொலை செய்த இன்னொருவர் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாடிரியின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலை இலாகா அதிகாரிகள் அவரை உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.