கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கான தேவாலயத்தின் மனு நிராகரிக்கப்பட்டது

 

Apex court rejectsரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயரின் மனுவை விசாரிக்கும் பெடரல் உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதிகளின் எண்ணிக்கை ஏழு அல்லது ஒன்பதற்கு விரிவாக்கப்பட வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஏழு நீதிபதிகள் அடங்கிய முன்னைய அமர்வு வழங்கிய தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பது முறையல்ல என்று தேவாலயத்தை பிரதிநிக்கும் வழக்குரைஞர் குழுவுக்கு தலைமை ஏற்றிருக்கும் சைரஸ் தாஸ் கூறினார்.

இது ஒரு பொதுநலம் சார்ந்த வழக்கு என்பதால் மக்களின் புலப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு எந்த ஒரு மறுஆய்வும் ஒரு விரிவான அமர்வால் செய்யப்பட வேண்டும் என்று தாஸ் கூறினார்.

ஆனால், ஐந்து நீதிபதிகள், அனைவரும் முஸ்லிம்கள், அடங்கிய அமர்வுக்கு தலைமை ஏற்றிக்கும் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமிட் எம்போங் அமர்வை விரிவுபடுத்தக் கோரும் மனுவை நிராகரித்தார். தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா நேற்று தேவாலயத்தின் மனுவை நிராகரித்துள்ளதாக அவர் கூறினார்.

“ஒரு வழக்கை விசாரிப்பதற்கான அமர்வை நியமிக்கும் அதிகாரத்தை தலைமை நீதிபதி பெற்றிருக்கிறார். இந்த அமர்வு அதற்கு எதிராகச் செயல்பட முடியாது.

“மேலும், உமது புகார் நான்கு நீதிபதிகள் வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பு பற்றியது. ஆகவே, ஐந்து நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு இந்த மனுவை செவிமடுக்கும் தகுதி பெற்றுள்ளது”, என்று நீதிபதி அப்துல் ஹமிட் கூறினார்.