த ஹெரால்ட் வார இதழ் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீது பெடரல் நீதிமன்றம் முன்னதாக அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அந்நீதிமன்றத்திடம் ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் செய்திருந்த மனுவை இன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கில் முன்னதாக ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முடிவில் எவ்வித செயல்முறை நியாயமின்மையும் இல்லை. “ஆகவே, “நாங்கள் இந்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்”, என்று பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமிட் எம்போங் தீர்ப்பளித்தார்.
வழக்கிற்கான செலவு தொகை குறித்து நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
நானும் எத்தனை முறை சொல்வது ? நீதி செத்து பல காலம் ஆகிவிட்டது. எல்லாம் இஸ்லாம் மயம்-மலாய்க்காரன் மயம்.
சட்டத்தில் எந்த அளவிற்கு சட்டத்தை நம்ப வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இப்படி மேலும் கீழுமாக படி ஏறி இறங்குவதானது இல்லாத ஊருக்கு வழி கேட்ட மாதிரி இருக்கு. சட்டம் பயின்று விட்டால் மட்டும் போதாது. அங்கே புத்தி தத்துவமும் வேலை செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் அகில உலக மலாய்க்காரர்கள் மாநாடு ஒன்று நமது நாடு ஏற்பாடு செய்து பொறுப்பேற்று நடத்தியது. அம்மாநாட்டில் உலகில் மற்ற நாடுகளில் வாழும் மலாய் இனத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஆப்ரிக்கா கண்டத்து மடகாஸ்க்கர் நாட்டு மலாய் இனத்தவர்களும் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை நம் நாட்டு வானொலி நிலையத்தார் நேர்காணல் கண்டனர். அந்நேர்காணலில் அவரிடம் நிலையத்தார் “உங்கள் ஊர் மலாய்காரர்களுக்கும் இந்நாட்டு (மலேசிய) மலாய்க்காரர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று வினவப்பட்டது. அவர் பதில் கூறுவதற்கு முன் நான் என்னென்னவோ கற்பனை செய்தேன். அவர் சொன்னார் “எங்கள் ஊர் மலாய்க்காரர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் ஆனால் இங்குள்ள மலாய்க்காரர்கள் இஸ்லாமியர்கள். இதுதான் மாபெரும் வேறுபாடு” என்று. அப்படியானால் அவர்கள் தங்கள் வழிப்பாட்டில் இந்த “Allah ” என்ற சொல்லைதனே பயன்படுத்துவர். சிந்திப்போம். உலக தமிழ் மாநாடும் நமது மண்ணில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு எத்தனை முறை அம்மாநாடு நடந்துள்ளது. ஒவொரு முறையும் அது மென்மேலும் சிறப்படைந்து வருகிறது. ஆனால் இந்த மலாய்க்காரர்கள் மாநாடு அந்த ஆரம்பத்தோடு நின்றுவிட்டது. தமிழ் ஆராய்ச்சி மாநாடு விதைக்கப்பட்டு வளர்ந்து எவ்வித வேறுபாட்டிற்கும் இடம்கொடாமல் , மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்கிறது. ஆனால் அந்த மாநாடு தேவையற்ற வேறுபாடுகளால் விதையிலேயே கருகிவிட்டது. நாம் நம்மை ஒன்றுபடுத்தும் காரியங்களில் கவனம் செலுத்தி பிரிக்கும் காரியங்களை தவிர்த்து மனிதம் அனைத்தும் அழுவாரோடு அழுதும் மகிழ்வாரோடு மகிழ்ந்தும் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
அடுத்த தேர்தலில் பா_ _ _னுக்கு முதல் ஆப்பு ரெடி
படத்தில் காணப்படும் சமய குருக்கள் இருவரும் கத்தோலிக்க சமயத்தை சார்ந்த ஓய்வு பெற்ற பேராயர்கள். அவகளின் முகங்களில் தவழும் புன்னகையை பாருங்கள். அவர்கள் விரும்பிய நீதிமன்ற தீர்ப்பு கிடைக்காத வேளையிலும், எவ்வித வெறுப்பும் காட்டவில்லை. அவர்கள் எல்லா வேளையிலும் தம் சமயத்தவர்களை அமைதி காக்க அறிவுறுத்துவர். இந்த தீர்ப்பினால் கிறிதவர்களிடமிருந்து எந்தவித விரும்பபடாத செயலும் நடைபெறாது. அவர்களையும் நம்மையும் நம் நாட்டையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் இஸ்லாமுக்கு எதிரான சாதகமான தீர்ப்பா?? எதிர்ப்பார்ப்பது “இலவு காத்த கிளி” போலத்தான்..
இனவெறியர்களுக்கிடையில் “அல்லா” என்ற சொல் சட்ட ரீதியில் படும் பாடு இருக்கிறதே!! அப்பப்பா !! இந்த இழுபறியில் யாருக்குத்தான் நன்மை???? இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்தானே!!! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”.. பக்குவப்பட்ட மனம் இருப்பின் பாதகம் கிடையாது!!!
நாம் பேசாமல் இருந்தால் விளைவுகள் இதைவிட் மோசமாக இருக்கும்.-ஆனாலும் இன்னும் நாம் எதிர் பார்க்கலாம்–MIC MCA -ஜால்ராக்கள் அம்நோகாரன்களை எழும்பு துண்டுக்காக தொங்கி கொண்டிருந்தால்
நீதிமன்றத்திற்கு வெளியே அருவாளோடும் சுத்தியலோடும் “அல்லாஹூ அக்பர்” என்று பயமுறுத்திக் கொண்டிருந்தால் எந்த நீதிபதி சொந்த புத்தியோடு செயல்பட முடியும்? இந்தப் பிரச்சனை இத்தோடு முடிவடையாது……தொடரும்…….!
சமய சுதந்திரம் எங்கே ?
நாம (இந்துக்கள்) ஏன் வருத்தப்படனும் கவலைப்படனும். தேவை இல்லாமல் அவங்க விசயத்தில் மூக்கை நுழைப்பானேன். எப்படியோ போகட்டும். நம்ம விஷயம் ஆயிரம் கிடக்கு அதற்கு வருத்தம் தெரிவிக்க நம்மளை விட்ட யாரும் இல்லை. நம்ம மதத்தை நக்கல் பண்ணுறது நையாண்டி பண்ணுறதும் அவங்க பண்பு.சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நாம எதுக்கு கோடி அசைக்கனும்.?