நாளை பிற்பகல் மணி 2.00 க்கு புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்தின் தலைமையகத்தில் மஇகாவின் புதிய தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் கட்சியைக் காப்பாற்றுவதற்காக உண்ணாவிரதம் தொடங்கவிருக்கிறார்.
சங்கங்கள் பதிவாளரை சந்திப்பதற்கு குமாருக்கு வாய்ப்பளிக்க ஆர்ஓஎஸ் மறுத்து விட்டதாக தமிழ் நாளிதழ்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
“மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய தகராறு தீர்க்கப்படும் வரையில் ஆர்ஒஎஸ் எந்த ஒரு புதிய நியமனத்தையும் அங்கீகரிக்கும் நிலையில் இல்லை”, என்று ஆர்ஒஎஸ் அதன் கடிதத்தில் கூறியுள்ளது.
தமது உண்ணாவிரதம் “அவர்கள் (ஆஒஎஸ்) தங்களுடைய புலன்விசாரணைக் குழு, தலைமை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படும் வரையில் தொடரும்”, என்று குமார் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள டெக்ஸ்ட் செய்தில் கூறியுள்ளார்.
அய்யோ இவன் தொல்லை தாங்க முடியவில்லை . அப்படியே அங்கே பிச்சை எடு
இவர் கூத்துல ஒரு கோமாளி!.
போடா நீயும் உன் உண்ணா விரதமும் , சந்து வழியா வந்து சிந்து பாடுறியா ?
” தை முதல் நாளே தமிழ் ஆண்டுப் பிறப்பு”
சரியானப் போட்டி ….
தொடருங்கள் உங்கள் தொண்டினை .
மிஞ்சி மிஞ்சி ரெண்டே ரெண்டு நாட்கள் தான். அப்புறம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓட்டமெடுத்துவிடுவீர்கள். டிப்ஸ் ஏதும் தேவையா? இதோ தருகிறேன். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் முன்பாக வயிறு புடைக்க ஒரு பிடி பிடித்துவிடுங்கள். இது உண்ணாவிரதம் என்பதால், தண்ணீர் குடிக்கலாம். அந்த தண்ணீர் ஆரஞ்சு ஜூஸாக இருக்கவேண்டும். அவ்வளவாக பசி எடுக்காது. ஆரம்பித்த முதல் நாளே வேண்டுமென்றே மயக்கம் போட்டு சாய்ந்துவிடுவதாக நடிக்க வேண்டும். ‘அய்யா உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்’ எனக் கூறிக்கொண்டே இருப்பததற்கு ஒரு சிறிய கூட்டத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். மிகவும் முக்கியம் பத்திரிக்கையாளர்கள். கொஞ்சம் ‘சம்திங்’ கொடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ‘நிலை’ மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என முதல்நாளே அவர்கள் ‘கோரஸ்’ பாடும்படி எழுதவேண்டும். இன்னும் நிறைய இருக்கு. முதல்ல உண்ணாவிரதம் இருங்கள் ,அப்புறம் சொல்கிகிறேன். ஆ….மறந்துவிட்டேன். உண்ணாவிரதம் வேண்டாம் என இப்போதிருந்தே உங்கள் தலைவர்கள் ஒருசிலரை பத்திரிக்கையிலே ‘கத்த’ வையுங்கள்.
அடேய், குறிப்பிட்ட பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த என்ன வலிக்குதா? தேர்தலில் குளறுபடி இல்லாவிட்டால் ஏன் ROS மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவு இட்டது ?
ஒரு அமைப்பை ஒழுங்காக வழி நடத்த தெரிய வில்லை ஆனால் இமாதிரியான முட்டாள் தனமான செயல் செய்ய மட்டும் தெரியும் !
நீ உண்ணாவிரதம் இருந்தால் என்ன அல்ல இறந்தால் என்ன ? உன்னால் மலேசிய இந்தியர்களுக்கு ஒரு லாபமும் இல்ல நட்டமும் இல்ல …….பாப்போம் எவ்வளவு நாள் உன் கூத்து என்று
குமார் அவர்களே ! என்ன சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டாமோ? 2015 ஆம் ஆண்டின் சிறந்த கோமாளித்தனம் ,தமிழர்களின் வரலாற்றில் ஈழத்திற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் விட்டவர் தியாகி திலீபன் அவர்களை தவிர வேறு எவரும் இல்லை . சும்மா படம் காட்ட வேண்டாம்.
குட் …பணம் பத்தும் செய்யும் ….அதான் உதவி தலைவர் கேட்டவுடன் ரோஸ் நேரம் தருகிறது ..உண்மையான இந்தியன் உங்கள் பக்காம் ..முதல் உதவி தலைவர் இருக்கும் போது எதற்கு சரவணன் அவர்கள் மூக்கை நூலைகிறார்?அவர்க்கு எப்படி ரோஸ் நேரம் தருகிறது?மக்கள் முட்டாள்கள் அல்ல
நீர் உண்ணாவிரதம் இருப்பதற்கான
நீர் உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணம் என்ன …. அப்படி ஒரு சரியான முறையான காரணமும் இல்லை அப்புறம் என்ன மயிருக்குடா நீ உண்ணாவிரதம் இருக்கின்றாய்..
முப்பது ஆண்டுகளாக சமுதாயத்தை உறிஞ்சி நன்கு கொளுத்துப் போன கூட்டத்தில் ஒருவராக இருந்தவர் இந்த குமார் அம்மான். பேராசிரியர் ராமசாமியின் உதவியாளரை தாக்கிய போதெல்லாம் நல்லவர் என தலையில் வைத்துக் கொண்டாடிய கூட்டம் இன்று ரவுடி என்று கூறுகிறது. ஊமைச் சாமியார் பழனிக்கு எதிராக ஆர்ஓஎஸ்சில் புகார் செய்தவர்கள் எல்லா யோக்கியர்கள் கிடையாது. அத்தனை பேருக்கும் குண்டர் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதை பத்திரிகைகள் பல முறை சுட்டிக்காட்டியுள்ளன. ஒரு யோக்கியர் செனட்டர் பதவியை வாங்கிக் கொண்டு பழனியை குறை சொல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் பதவியை துறந்து விட்டு போராட்டத்தில் குதிக்க வேண்டும். எல்சிஇ வரை மட்டுமே படித்த ஒருவர் மஇகா மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு வருமானம் போய்விடுமோ என்ற அச்சத்தில் போராட்டம் நடத்துகிறார். ஒருவர் 37 மில்லியன் வெள்ளியை அரசாங்கத்திடமிருந்து வாங்கிக் கொண்டு மிளகாய் நடுகிறேன் என்று பாவ்லா காட்டிக் கொண்டு இருக்கிறார். கட்சிக்கு எந்த தியாகமும் செய்யாமல் திடீரென எம்.பி., துணையமைச்ர், அமைச்சர், கட்சியின் துணைத் தலைவர் என உயர்ந்த பதவிக்கு சென்றவர் இவர்களுக்கு தலைவராக இருக்கிறார். இவர்களில் பலரை ஜாதி ஒன்று சேர்த்து வைத்துள்ளது. குமார் அம்மானின் உண்ணாவிரதத்தை குறை சொல்பவர்கள் அவர் அம்பலப்படுத்தி வரும் மைக்கா, டெலிகோம் ஊழல், மஇகா கட்டிட மர்மம், பக்கத்து நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம், கட்சியின் 40 சொத்துக்களின் நிலை தெரியத அவலம், 17 மில்லியன் வெள்ளி கடன் இரகசியம் ஆகியவற்றுக்கு எதிராக போலீசிலும் எம்ஏசிசியிலும் இன்னும் புகார் செய்யாதது ஏன்?
பாரு பாரு பயாஸ்கோப் இலவச படம் பாருங்கள் .
முதல இந்த உண்ணா விரத போராட்டம் மலாய்காரர்களுக்கு விளங்குமா? காரணம் அவர்களில் அப்படி யாரும் செய்வதில்லை! இரண்டாவது தேர்தல் இல்லாமல் கட்சியின் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க முடியும் என்றால், பிறகு எதற்கு சங்கங்கள் பதிவிலாக்க? மா இ கா வின் தலைவர் பதவிக்கு முதல தேர்தல் வையுங்கள். அது என்னடா ஏகமனதாக தலைவரை தேர்தெடுக்கிறது ? அது மட்டுமா ? துணை தலைவரையும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கிறது. இப்போ தலைமை செயலாளர் ! அப்புறம் தொண்டர்கள் ! என்னடா இது ? கட்சி நடதுரிங்கள அல்லது குடும்பம் நடதுரிங்கள ?
என்ன சாரே இது,நடந்த தேர்தல் முற்றிலும் தவறு என்று சொல்றேன் அப்புறம் என்ன உண்ணாவிருதம் போய் சாப்பிடுங்க கேஸ்ட்ரிக் வர போகுது.
கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதேடா குமாரு…
என்ன கூத்து….! என்ன மடமை …!
ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம், mic தலைகள் சேறு …..!
குப்புசாமி சொல்வதை பார்த்தல் எம் ஐ சி யில் 100% கோளாறு இருக்கு.arasaangam இதை கவனிக்கவும்.
ஜோக் ஆப் 2015 ஸ்டார்ட்ஸ்….
முப்பது வருடமா இந்திய சமுதாயத்துக்கு அரசாங்கம் குடுத்த பணம் , சொத்து எல்லாம் தனி நபர் பெயரில் வந்தது எப்படி? இன்று கூச்சல் போடும் சரவணன் அவர்களே மோகன் அவர்களே வேள்பாரி அவர்களே இதற்க்கு பதில் கூறமுடியுமா ?உங்கள் பதவி சுகத்துக்கு எதற்கு அய்யா சமுதயது பெயர கேடுக்கரிங்க ?
இவன்களுக்கு ஏதாவது இருக்கிறதா? உண்ணா விரதம் இந்தியாவிலேயே மதிக்கப்படுவதில்லை. எல்லாம் கேலிக்கூத்தாகவே ஆகிவிடும். மட ஜென்மங்கள்
உண்ணாவிரதம் இருந்து எந்த அரசியல்வாதியும் செத்துபோனதாக சரித்திரம் இல்லை! நீங்களாவது அதனைப் பொய் என்று நிருபியுங்கள்!
உயிருடன் இருபதை விட சாவதே மேல்
குமாரு ….நீ ஹீரோ ஆக வேண்டுமானால் , நம்மவர்களுக்கு பத்து சதவீதம் வேலை வாய்ப்பு வேண்டும் என்று விரதம் எடு ,அப்படி இல்லையானால் தாய் மொழி பள்ளிக்கூடம் நிலைக்க வேண்டும் என்று உண்ணா விரதம் எடு . அதை விட்டு விட்டு நீ சம்பாதிக்க உனக்கு சாதகமான தலைவர்தான் இருக்க வேண்டும் என்ற உனது எண்ணம் எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா ………
நீ வந்த வழியே வேற , இதுல எதுக்கு ராஜா பயஸ் கோப்பு காட்டுற அந்த……உமை ராஜா பேச சொலுங்க தம்பி…..
அட விடுங்கப்பா … இதுகள பத்தி பேசி பேசி எழுதி எழுதி ஒன்னு ஆகா போருதுள்ள. இதுகளுக்கு சூடு சொரணை எதுவும் கிடையாது. இவன் உண்ணாவிரதம் எடுத்தா… நம் தமிழர்களின் மானம் கொடிகட்டி பறக்கும்.
போடா…………
ஒரு நஷ்டமும் இல்லை,ஒரு லாபமும் இல்லை மக்களுக்கு,பிறகு ஏன்டா ஆர்பாட்டம்.ஆர்.ஒ.எஸ்.முன்பு பிச்சை எடு .
மா இ க கட்சிக்காரர்கள் நன்றாக அவர்களை விளம்பரப்படுதிக்கொள்கிரர்கள் !
அன்பு வாசகர்களே அருமையாக கருத்து பத்தி செய்கின்றிர்கள்.அனைவருக்கும் எனது நல வாழ்த்துக்கள். ம இ கா இருப்பதும் ஒன்று தான், இல்லாது இருப்பாது ஒன்று தான் கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவர்கள் இந்தியர்களுக்கு ஆற்றிய சேவைகைகள் என்ன? மிஞ்சி இருப்பது இந்திய சமுதாயத்தின் கோவணம் மட்டும் தான்.ம இ கா வினர் நம்மிடமிருந்து கோவணத்தை திருட விடாமல் விளித்துகொல்லுங்கள் தோழர் களே.மாறுவோம் மாற்றுவோம் முன்னேறுவோம் வாரீர் தோழர்களே.
கடத்த
30 ஆண்டுகளாக
மத்திய மாநீல அரசுகளில் பதவி வகித்த அனைவருடைய சொத்து விபரம் அனைத்தயும் வெளியெட வேண்டும்.
அமரர் மணிக்கா போன்ற பெரும் தலைவர்கள் கட்டி காத்த கச்சியை, இப்படி, ஆர் ஒ எஸ் அஞ்சடியில உண்ணா விரதம் என்ற நாடகத்தை நடத்தி, கேவல படுத்திர இவன … கச்சியை விட்டு தூக்கனும்.
தமிழர்கள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் எதிர்கால சமுதாயம் கேள்வி கேட்க நாதியற்ற சமுதாயமாக மாறிவிடும்.அந்நிய நாட்டவருக்கு கிடைக்கும் உரிமை தமிழர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் நிலைமை உருவாகும்.மாற்றம் காலத்தின் கட்டாயம்.
இந்த உண்ணாவிரதம் தனது எதிர்காலத்திற்கு என்றில்லாமல் நம் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு என்று இருக்க வேண்டும்.
வேலை இல்லாத அம்பட்டன் எதையோ புடிச்சி செரைச்சானாம், கதையாகி விட்டது மஇகா-வின் ‘நியமன’ தலைமைச் செயலாளரின் நிலைமை.
குமாரு , தண்ணி குடிச்சி உண்ணாவிரதமா ? அதுக்கும் மேல….
ஐயா சிங்கம்! இரண்டே நாட்களில் மூட்டை முடிச்சுகளுடன் ஓட்டம் பிடிப்பார் இந்த குமார் அம்மான் என்று எப்படி சரியாக கணித்தீர்கள். அந்த தகர டப்பா கோஷ்டியுடன் உங்களுக்கும் தொடர்பு உள்ளதோ?