பிரதமர்: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு இதுவே சரியான தருணம்

pmஎரிபொருள்  விலை  படுவீழ்ச்சி  கண்டிருக்கும்  இந்த  நேரம்தான்   பொருள், சேவை  வரியைக்  கொண்டுவர  சரியான  நேரமாகும்  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்.

“ரோன் 97, ரோன் 95, டீசல் ஆகியவற்றின்  விலைகள்  குறைந்திருப்பது  ஒரு  காரணம். விலைக் குறைவினால்  மலேசியப்  பயனீட்டாளர்களிடம்  செலவுசெய்ய  கூடுதல்  பணம்  கைவசம்  இருக்கும்.

“இது அவர்களின்  வாங்கும்  சக்தியை  அதிகரிக்கும்.. விலைமதிப்புள்ள  பொருள்களை  அவர்களால்  வாங்க  இயலும்”, என  நஜிப்   நேற்றிரவு  டிவி3  நேர்காணலில்  கூறினார்.

எண்ணெய்  விலை  விழ்ச்சியால்  பணவீக்கமும்  குறையும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

“இவ்வாண்டு  பணவீக்க  விகிதம்  2.5%-இலிருந்து 3.5% ஆக  இருக்கும்  என  நினைக்கிறோம்.

“ஆக,  ஏப்ரல் முதல்  நாள் ஜிஎஸ்டி-யை  அமல்படுத்த  சரியான  நேரமாகும். அப்போது  பணவீக்க  விகிதம்  குறைந்திருக்கும்,  நாட்டுக்கும்  கூடுதல்  வருமானம்  தேவைப்படும்”, என்றாரவர்.

160 நாடுகள்  ஜிஎஸ்டி-யைக்  கொண்டிருக்கின்றன. மேலும், மலேசியாவில் 12பேரில்  ஒருவர்தான்  வருமான  வரி  செலுத்துவதையும்  நஜிப்  சுட்டிக்காட்டினார்.

அதாவது மலேசியாவின்  வரித்தளம்  மிக  குறுகலானது. இதனால்  அரசாங்கத்தின்  வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாக  நஜிப்  கூறினார்.