மகாதிரிடம் பாடம் கற்பீர்: நஜிப்புக்கு டயிம் அறிவுறுத்து

daimபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், நெருக்கடி  நிலையைச்  சமாளிக்கும்  விதத்தை டாக்டர்  மகாதிர்  முகமட்டிடமிருந்து  கற்றுக்கொள்ள  வேண்டும்  என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின்.

சைனா பிரஸ்  செய்தித்தாளுக்கு வழங்கிய  நேர்காணலில்   இவ்வாறு  கூறிய டயிம், அண்மையில்  நஜிப்பைச்  சந்தித்ததாகவும்  அப்போது  வெள்ளப்  பேரிடரைச்  சமாளிப்பதில்  இன்னும்  திறமையாக  செயல்பட  வேண்டும்  என்பதை  அவரிடம்  வலியுறுத்தியதாகவும்  சொன்னார்.

“நெருக்கடி  நிலையைச்  சமாளிப்பதில்  மேலும்  திறமை   தேவை  என்பதைச்  சொன்னேன். மகாதிர்  நெருக்கடிகளைத்  திறமையாகக்  கையாண்டிருக்கிறார்  என்பதால் அவரிடம்  கற்றுக்கொள்ளலாம்  என்றேன்”, என்றாரவர்.

அதற்காக நஜிப்  நெருக்கடி  நிலையைச்  சமாளிக்கத்  தவறிவிட்டார்  என்று  சொல்லவில்லை  என்பதையும்  டயிம்  வலியுறுத்தினார்.

நெருக்கடியைச் சமாளிப்பதில்  மகாதிர்  வல்லவர்  என்பதையே  தாம்  குறிப்பிடுவதாகவும்  அவர்  கூறினார்.