திரெங்கானு பள்ளிவாசல்களில், முஸ்லிம் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட, சமய உரை நிகழ்த்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை விதிப்பு அடுத்த மாதத்திலிருந்து அமலுக்கு வருவதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
திரெங்கானு சுல்தான் சுல்தான் மிஸான் சைனல் அபிடின் பள்ளிவாசல்கள் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டிருப்பதை விரும்புகிறார் என மாநில சமய விவகார ஆணையர் ரோஸாலி சாலே கூறினார்.
“தலைவர்களின் உருவப்படங்களுக்கும், அடையாளச் சின்னங்களுக்கும் அங்கு இடமில்லை. இது சுல்தானின் ஆணை. பள்ளிவாசல்கள் இஸ்லாமிய சமூகத்தின் மையங்களாகவும் ஒற்றுமைக்கு அடையாளமாகவும் விளங்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாகும்”, என்றாரவர்/
நான் தவாறாகச் சொல்லவில்லை என்றால், இஸ்லாத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் “அரசாங்கம்” என்பது இஸ்லாமிய மத கோட்பாடுகளை கொண்டு வழிநடத்துவதேயாம். அவ்வாறு வழி நடத்துவதற்கு முதலிடமாக அமைவது பள்ளிவாசலேயாகும். அங்கேயே அரசியல் பேச வேண்டாம் என்றால் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான சட்டமோ என்ற டவுட் வருகின்றது!. எதற்கும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்!.