ஜிஎஸ்டி-யைத் தள்ளிப்போடுவதே மக்களுக்கு உகந்தது

leongஅரசாங்கம்  மக்கள்  நலனுக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதாக  இருந்தால் பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)  அமலாக்கத்தை  ஒத்திப்போட   வேண்டும்.

இக்கருத்தை  முன்வைத்த செலாயாங்  எம்பி  வில்லியம்  லியோங், வாழ்க்கைச்  செலவின  உயர்வினால். சாதாரண  மலேசியர்கள்  கடும் தொல்லைகளை  எதிர்நோக்குவதாகக்  கூறினார்.

“அவசரத்  தேவைகளைச்  சமாளிக்க  சாதாரண  மலேசியரிடம்  போதுமான  சேமிப்பு  இல்லை. பொருளாதார  நெருக்கடியின்  தாக்கத்தை  எப்படிச்  சமாளிப்பார்கள்!”, என்று  வினவிய  லியோங்  ஜிஎஸ்டி  அவர்களுக்கு  மேலும்  ஒரு  சுமையாகும்  என்றார்.

“மலேசியர்களின்  சேமிப்பு  விகிதம்  2008-இலிருந்து  மிகவும்  குறைந்து  விட்டது.  குடும்பங்களின்  கடன்  சமாளிக்க  முடியாத  அளவுக்குக்  கூடி  விட்டது. நொடித்துப்போகின்றவர்களின் எண்ணிக்கை   உயர்ந்து  வருவதே  இதற்குச் சான்று”.

பிரதமரின்  2015  திருத்தப்பட்ட  பட்ஜெட்மீது  கருத்துரைத்தபோது   லியோங்  இவ்வாறு  கூறினார்.