இஸ்மாமிய அரசு (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவோர் மற்ற கைதிகளுடன் அல்லாமல் தனியே சிறை வைக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் மற்ற கைதிகளிடம் தங்கள் கருத்துகளைப் பரப்புவதைத் தடுப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
“அவர்கள் மற்ற கைதிகளையும் வருங்காலத்தில் பயங்கரவாதிகளாகவோ அவ்வியக்கத்துக்கு நிதியுதவி அளிப்போராகவோ மாற்றிவிடலாம் என்று அஞ்சியே அவர்களைப் பிரித்து வைக்கிறோம்”, என ஜாஹிட் இன்று தெரிவித்தார்.
“தாப்பாவிலும் பெந்தோங்கிலும் உள்ள சிறைச்சாலைகள் ஐஎஸ் தொடர்புள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்”, என்றாரவர்.
சந்தோசம் அவர்களை தனி சிறையில் வைத்து பாடம் நடுதுங்கள் வாழ்த்துக்கள் .