இந்தோனேசிய கடல்படை முக்குளிப்பாளர்கள் QZ8501 விமானத்தின் நடுப்பகுதிக்குச் சென்று மூன்று சடலங்களை எடுத்து வந்தனர்.
கடலில் நீரோட்டம் வலுவாக இருந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும் விமானத்தின் நடுப்பகுதியை அடைவது சிரமமாக இருந்தது. இன்று ஒரு வழியாக அவர்கள் அப்பகுதியைச் சென்றடைந்தார்கள்.
“அங்கு மேலும் பல சடலங்கள் கிடைக்கலாம்”, என தேடல் நடவடிக்கை தலைவர் சூர்யாடி சுப்ரியாடி தெரிவித்தார்.
விமானத்தின் நடுப்பகுதியை கடலின் மேல்பரப்புக்குக் கொண்டுவரவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இதுவரை அந்த விமானத்திலிருந்து 56 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 28-இல், இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து 162 பேருடன் சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது ஏர் ஏசியாவின் QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்தது.
இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, அந்த விமானம் மிக விரைவாக மேலே எழும்பியதாகவும் அதனால் அதன் இயந்திரங்கள் செயலிழந்து ஜாவா கடலில் விழுந்ததாகவும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னேஷியஸ் கூறினார்.