சிருல் அஸ்ஹார் உமரை ஒப்படைக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“அரச மலேசிய போலீசார் விஸ்மா புத்ராவழி அக்கோரிக்கையை விடுத்துள்ளனர்”, என ஜாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இதற்கு, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்து பேசுதல் போன்று சில நடைமுறைகள் உண்டு.
“ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் விவாதிக்கும் பொறுப்பு போலீசிடமும் சட்டத்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.
மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷரிபு கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சிருலுக்கும் இன்னொரு போலீஸ் அதிரடிப் படையினரான அஸிலா ஹட்ரி-க்கும் கடந்த வாரம் மரண தண்டனை விதித்தது. ஆனால், சிருல் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதாக தெரிகிறது.
அவரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான இடத்தில இருக்கிறாய். இங்கே வரதே
என்னடா இது !!!!!!! கொலைக்கான காரனேமே தெரியலை ! ஆனால் இருவருக்கு தூக்கா ? விநோதமாக இருக்கிறதே . முதலில் இந்த ஜகிட் ஹமிடியை தூக்கில் போட்டால் ஒரு வேலை காரணம் தெரிய வருமோ ?