ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக ஆதரவு திரட்ட இந்தியா சென்றுள்ள யாசிதி குழு தலைவி

yazidi_laila_001இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள யாசிதி இன குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஈராக்கில் கணிசமாக வசிக்கும் யாசிதி இன மக்கள் ஈராக்கில் எழுச்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களில் இருந்து மீள இந்தியாவிடம் ஆதரவு திரட்ட வந்துள்ளனர்.

இந்தியாவிடம் ஆதரவு திரட்டுவதற்காக, யாசிதி அமைப்பு ஒன்று லைலா என்ற பெண் தலைமையில் டெல்லி வந்துள்ளது.

லைலா இந்திய பயணம் பற்றி கூற்கையில், அமெரிக்காவில் சில இந்தியர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தின் மூலம், இந்தியர்கள் பலருடன் தொடர்பு கிடைத்தது. அதுதான் இந்தியா வர என்னை தூண்டியது.

இந்தியர்களிடம் யாசிதி இன மக்களுக்கு மிகவும் பிடித்த விடயம் பிறரை துன்புறுத்தாமல், ஒற்றுமையாக வாழும் கலைதான்.

yazi1achouraஇந்துக்களுக்கும், எங்களது மத நம்பிக்கைக்கும் நிறைய ஒற்றுமைகளும் உள்ளன.

எனவே, ஒரு வாரமாக இந்தியாவில் தங்கியிருந்து, இங்கு நிகழவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மக்களிடம் சந்திப்பு நடத்த உள்ளோம்.

இத்தனை மாதங்களுக்கு பிறகும், யாசிதிகள் நிலைமை மேம்படாமல் அடிப்படை வசதிகள் இன்றிதான் தவித்து வருகின்றனர்.

மேலும் செக்ஸ் அடிமைகளாக சிக்கிய பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து அப்பாவிகளை காப்பாற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டியது அவசியம்.

qaayazi2இந்தியா போன்ற நாடுகள் சிறுசிறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டாலும் எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.

விரைவில் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களுக்கும் எங்கள் குழு சென்று அங்கு நடைபெறவுள்ள கலாச்சார திருவிழாவில் பங்கேற்க வரும் மக்களிடம் எங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி ஆதரவு கேட்போம்.

மேலும், ஈராக் இனிமேல் முன்னேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்றும் சிறுபான்மையினருக்கு அந்த நாடு பாதுகாப்பானது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com