மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷரீபூ-வைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பெற்ற சிருல் அஸ்ஹார் உமர், ஆஸ்திரேலியாவில் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.
“இப்போதைக்கு அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது கடப்பிதழை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கும் நிபந்தனை அட்டை அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது”, என விஸ்மா புத்ரா அதிகாரி கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
அல்டான்துன்யா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சிருலுக்கும் இன்னொரு போலீஸ் அதிரடிப் படையினரான அஸிலா ஹட்ரி-க்கும் கடந்த வாரம் மரண தண்டனை விதித்தது. ஆனால், சிருல் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதாக தெரிகிறது.
உமக்கு இல்லாத சலுகையா? இன்னும் என்னென்ன வேணும் கேள்!!! எல்லாமே கிடைக்கும். ராஜ வாழ்க்கைதான் உமக்கு!!!! இருப்பினும் சற்று கவனம்…. துப்பறிவாளர் பாலாவைப்போல் ஏமார்ந்துவிடாதே!!!!!
எங்கு போனாலும் இவர்களுக்கு ஒரு கங்காணி தேவைப்படுகிறார்!
விஷயம் தெரிந்தவன்.