குடிநுழைவுத் துறை விசிட் பாஸ்( தற்காலிக வேலை அல்லது பிஎல்கேஎஸ்) நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் முகப்புகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அவை இன்று தொடங்கி பிப்ரவரி 28-வரை திறந்திருக்கும்.
அன்னிய தொழிலாளர்களின் வேலை அனுமதிகளை இணையவழி நிர்வகிக்கும் பொறுப்பை வெளி நிறுவனமான MyEG சர்வீசஸ் பெர்ஹாட்டிடம் ஒப்படைத்ததைப் பொதுமக்கள் கடுமையாகக் குறைகூறியதை அடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“பிஎல்கேஎஸ் முகப்புகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருக்கிறோம். அவை தற்காலிகமாக திறந்திருக்கும். அதேவேளை இணையவழிச் சேவையும் தொடரும்”, எனக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபா இப்ராகிம் கூறினார்.