ஊராட்சித் தேர்தல்களைத் திரும்பவும் கொண்டுவரும் டிஏபி-இன் ஆசை இன்னொரு மே 13 இனக் கலவரத்துக்குத்தான் இட்டுச் செல்லும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் எச்சரிக்கிறார்.
“நிலைத்தன்மையைக் கெடுக்ககூடிய, கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையில் இடைவெளியை விரிவடையச் செய்யக்கூடிய எதையும் செய்ய எண்ணக்கூடாது. அது பதற்றத்தைப் பெருக்கி அதன் விளைவாக நாட்டின் வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும் மே13 போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடலாம்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஊராட்சித் தேர்தல்கள் நகர மக்களுக்கு நன்மையாக அமைந்து. சுற்றியுள்ள கிராமங்களை ஓரங்கட்டி விடும் என்று ஹாடி குறிப்பிட்டார்.
நகரங்களில் சீனர்கள் அதிகம் வசிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“சிலாங்கூரில் நகராட்சி மன்றத்தின் வருமானம் ரிம250 மில்லியன். கிராமப்புறத்தில் உள்ள ஒரு முனிசிபல் மன்றத்தின் வருமானம் ரிம50 மில்லியன். அங்கு இன்னொரு இனத்தவர்களே அதிகம்.
“பல இனங்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் அரசியல் வெற்றிக்கும் பொருளாதார மேலாதிக்கத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது”, என்றாரவர்.
கம்பங்களில் உள்ள மலாய் மலேசியர்களையும் தோட்டப்புற இந்திய மலேசியர்களையும் உள்பகுதியில் வசிக்கும் பூர்விகக் குடியினரான மலேசியர்களையும் ஒரங்கட்டுவது சரியல்ல என ஹாடி கூறினார்.
அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை இவர் சுத்தமாக நிறுத்தி விட்டார் போலிருக்கு. ஊராட்சித் தேர்தல் மே-13 இட்டுச் செல்லும் என்று பேசும் இவரா மக்கள் கூட்டணிக்கு தலைவர்?. மாக்கள் கட்சிக்கு தலைவராகவே தகுதி உள்ளவர்.
எதிர்வரும் தேர்தலில் பாசுக்கு மோசம்தான்… இளைய தலைமுறையிடம் கட்சித் தலைமைத்துவத்தை ஒப்படைப்பது நலம்.
தலைவரு மண்டை சுத்தி பொய் இருக்குறாரு.
கடந்த தேர்தலில் குடும்பமாக பாக்காத்தானுக்கு வாக்களித்தோம். அடுத்தப் பொதுத்தேர்தலில் பாஸ் பாக்காத்தானில் இருந்தால் ஒரு ஓட்டுகூட பாக்காத்தனுக்குப் போடமாட்டோம். பாஸ் என்பது பாக்காத்தான் தோல்போர்த்திய இன்னொரு அம்னோ!
ஊராட்சித் தேர்தல் நடத்தினால் மே- 13 வரும் என்று கூறும் அடி அவாங் அப்படி ஒரு ஆசை அவர் மனதில் இருக்கிறதோ என்று என்ன தோன்றுகிறது..?ஆரம்ப காலங்களில் நடந்தது தானே இப்ப கலவரத்தை நினைவுப் படுத்தி பயமுருத்துவதேன்…?
நம் நாட்டுக்கு ஊராட்சித் தேர்தல்களைத் திரும்பவும் தேவை இல்லைதான். ஆனால் அதற்காக ஊராட்சித் தேர்தல்கள் இன்னொரு மே13-க்கு வழிகோலும்’ என்று அச்சுறுத்துவது அறிவுடமை அல்ல.