கேலிக்கூத்தான உண்ணாவிரதம்

fastமஇகாவின்  குமார்  அம்மான்  “சாகும்வரை” என்று  கூறி   வியாழக்கிழமை  உண்ணாநோன்பு  ஒன்றைத்  தொடங்கினார்.

ஆனால். மறுநாள்  30-மணி  நேரத்துக்குள்ளாகவே  அவரது  உண்ணாவிரதம்  முடிவுக்கு  வந்தது.

இந்தக்  குறுகிய  கால   உண்ணாவிரதத்துக்கு  இந்திய  சமூகத்தின்  ஆதரவு  எப்படி? இந்திய  சமூகத்தைப்  பொருத்தவரை  மஇகா  தனக்குச்  சம்பந்தமில்லாத  ஒன்று  என்பது போலவே  நடந்துகொண்டிருக்கிறது  என பார்டி  சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)  தலைமைச்  செயலாளர்  எஸ்.அருட்செல்வன் கூறினார்.

இந்திய  சமூகம்  கவனம்  செலுத்த  வேறு  முக்கிய  விவகாரங்கள்  இருப்பதாக  அவர்  குறீப்பிட்டார்.

“உண்ணாவிரதத்துக்கு  ஆதரவாக  இந்தியர்கள்  திரண்டு  வந்தார்களா? அப்படி   எதுவும் நடந்ததாகத்  தெரியவில்லையே”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“இந்திய  சமூகத்துக்கு  இதைவிட முக்கியமான,  அன்றாட  வயிற்றுப்பாட்டைக்  கவனிப்பது  போன்ற  வேறு  முக்கிய  விவகாரங்கள்  உள்ளன”, என்று  கூறியவர்  இந்த உண்ணாவிரதம்  அவர்களின்  வாழ்க்கை  மேம்பாட்டுக்கு  எவ்வகையிலும்  உதவாது  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.