சிருல் பாதுகாப்புமிக்க சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

aussieபுதன்கிழமை  ஆஸ்திரேலியாவின்  பிரிஸ்பேனில்  கைது  செய்யப்பட்ட  சிருல்  அஸ்ஹார்  உமர், கூடினபட்ச  பாதுகாப்பைக்  கொண்ட  சிட்னி  வில்லாவூட்  தடுப்பு  மையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர்  பிரிஸ்பேனின்  வடக்கே  உறவினர்களுடன்  வசித்து  வந்ததாக  ஏபிசி  இணையச்  செய்தித்தளம்  கூறிற்று.

அல்டான்துன்யா ஷரீபு  கொலை  வழக்கில்  உச்ச  நீதிமன்றம் சிருலுக்கும்  இன்னொரு  போலீஸ்  அதிரடிப்  படையினரான  அஸிலா  ஹட்ரி-க்கும்  ஜனவரி  13-இல்  மரண  தண்டனை  விதித்தது. ஆனால்,  சிருல்   அதற்கு  சில  மாதங்களுக்கு  முன்பே  வெளிநாடு  சென்று  விட்டார்.

சிருல். தன்  19-வயது  மகனுடனும்  இன்னுமோர்  உறவினருடனும்  குயின்ஸ்லாந்தின்  இப்ஸ்விச்சில்  வசித்து  வந்ததாக  ஏபிசி தெரிவித்தது. அவர்  செல்லத்தக்க   கடப்பிதழ்,  சுற்றுப்பயண விசா  ஆகியவற்றுடன்தான்  கடந்த  அக்டோபரில்  ஆஸ்திரேலியா  சென்றிருக்கிறார்.

சிருலின்  மகன்  என்று  கூறிக்கொண்ட  ஒருவர்  Shuk Sz  என்ற  பெயரில்  முகநூலில்  அண்மையில்  பதிவிட்டிருந்தார்: “அவர் (சிருல்) மட்டும்  பத்திரிகைகளிடம்   பேசினால்  மலேசியா  கவிழும்”.

அந்த  முகநூல்  பக்கம்  இப்போது  இல்லை. அகற்றப்பட்டு  விட்டது.