ஊழலை அம்பலப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதில்லை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பிஎன் வழிநடத்தும் கூட்டரசு அரசாங்கத்தைச் சாடினார்.
“அது மேலும் ஊழல் செய்யவே பசி கொண்டு அலைவதுபோல் தோன்றுகிறது”. நேற்றிரவு பினாங்கு கழகமும் சி4 ஊழல்- தடுப்பு கண்காணிப்பு அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் லிம் இவ்வாறு கூறினார்.
சி4 என்பது Centre to Combat Corruption and Cronyism என்பதன் சுருக்கமாகும்.
“ஊழல் பேய்களை, அப்பேய்கள் நாட்டின் நிதிகளைக் காலி செய்வதற்குமுன் தலைமைக் கணக்காய்வாளர் ஒழிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
“மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தைப் பொருத்தவரை அது, வெறும் நிழலாக போல் இல்லாமல் எப்போது ஹாங்காங் ஊழல்-தடுப்பு அமைப்புப் போல மும்முரமாக செயல்படப்போகிறது என்று பலரும் கேட்கிறார்கள்”, என்றாரவர்.
எம்ஏசிசி சட்ட ஆலோசகர் ஹான் ச்சீ ருல், பொதுக் கணக்குக்குழுத் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட், டிஏபி புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீவன் சிம் ஆகியோர் அக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். சி4 இயக்குனர் சிந்தியா கேப்ரியல் தலைமை தாங்கினார்.
சரியாக சொன்னீர் உதாரணம் ஜெட்டில் பறக்கும் தம்பதிகள்
அம்னோ பேய்கள் புனிதர்களாக மாறிவிட்டால் ஊழல் பேய் தானாக மாறிவிடும்!
அம்னோ பேய்கள் என்றுமே மாறாது – ஒருக்கால் இந் நாட்டில் ஆங்கில பள்ளிகள் இருந்திருந்தால் மாற்றத்திற்கு சிறிது எதிர்பார்க்கலாம். அரைவேக்காடு படிப்பையும் மத இன வெறி தூண்டுதலும் இருக்கும் வரை இது ஆட்சியில் நிலைக்க என்ன வெல்லாமோ நடக்கலாம்.
“BR1M” என்ற பெயரில் அரசாங்கமே மக்களுக்கு லஞ்சம் தரும்போது, ஊழலை எப்படி ஒழிப்பது ???
இந்த வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, லஞ்சம் வாங்குபவர்கள் லஞ்ச தொகையுடன், அதற்க்கான GST 6% -வரியையும் சேர்த்து வாங்க போகிறார்களாம்.
“BUDAYA RASUAH 1 MALAYSIA” (BR1M)
வாழ்க !!! மென்மேலும் வளர்க !!!