சிருல் அஸ்ஹார் உமர் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவைக் குறை சொல்வது நியாயமாகாது என்கிறார் ஆஸ்திரேலிய அரச வழக்குரைஞர் மார்க் ட்ரோவல். சிருல் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி கடுமையான பிணை நிபந்தனைகளை மலேசிய அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் போட்டிருக்க வேண்டும்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் வழக்குரைஞர் தொழில் செய்யும் ட்ரோவல், அல்டான்துன்யா ஷரீபு கொலை வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு திருத்தப்படும் சாத்தியத்தை மலேசிய அரசுத்தரப்பினர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
“சிருல் தப்பியோடும் அபாயம் இருப்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். அவர் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கடுமையான நிபந்தனை போட்டிருக்க வேண்டும். வெளியேற முடியாதபடி கடப்பிதழை ஒப்படைக்கும்படி கூறியிருக்க வேண்டும்.
“இவை எதுவும் செய்யப்படவில்லை. அதனால், சிருல் ஒரு வழக்கமான வர்த்தக விமானத்தில் வெளியேறுவது வசதியாக போய்விட்டது. அவர் இங்கிருப்பதை ஆஸ்திரேலியாவும் விரும்பவில்லைதான். திருப்பி அனுப்பவே விரும்புகிறோம். ஆனால், நடந்ததற்கு எங்களைக் குறை சொல்வது நியாயமல்ல. அவரைத் தப்பியோட விட்டவர்கள் நாங்கள் அல்ல”, என மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் கூறினார்.
சரியான சாட்டை அடி Malaysia க்கு
வணக்கம். குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது இதுதானோ…….
ரிங்கிட் மலேசியா 26,ஆயிரம் வருமான வரி செலுத்தாதினால் என்னுடைய கடப்பிதழ் முடக்கப் பட்டுளுளது .ஆனால் மரணதண்டனை பெற்றவருக்கு கடப்பிதழ் முடக்கப்படவில்லை !!! என்ன கொடுமையா இது ?
Mark Trowell, நீங்கள் கூறுவது உண்மைதான் ; ஆனால் எங்கள் நாட்டு எருமைகளுக்கு அந்த அளவுக்கு அறிவு என்பது சிறு துளி கூட இல்லை என்பதை இப்போது தங்களுடைய இந்த கருத்தால் உலகமே அறிந்திருக்கும். நன்றி !!!
அவர் வெளிநாட்டுக்குப் போனதே ஒரு நாடகம் தானே…
நம் நாட்டு போலிஸ் எவ்வளவு அயோக்கிய தனமானது என்பதை இந்த சிருள் விவகாரத்தில் தேரிந்துக்கொல்லாம்.இந்த சிருள் விவகாரத்தில் நஜிபின் நாடகம் தன தற்போது சிருள் ஆஸ்திரேலியாவில் அரசியல் அடைக்களம்.பல ஆண்டுகளாக சிருள் மற்றும் ஆசாகார் முகமே வெளியே காட்டாமல் போலிஸ் முடி மறைத்து வைத்து கபட நாடகம் ஆடியது.நஜிபிக்கு கை பாவையாக செயல் பட்டது நமது போலிஸ்.இந்த மரண தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிருள் ஆஸ்திரேலியாவிலிருந்து அல்தந்துய கொலை வழக்கில் யார், யார் சம்மந்தபடுள்ளனர் என்பதை போட்டு உடைக்க வேண்டும்.செய்வாரா சிருள் என்பதை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் உடன் பிறப்புக்களே.