குழந்தைகளை பிரம்பால் அடிப்பது குற்றமாக்கப்படலாம்

 

caningதற்போதைய குழந்தை சட்டம் 2001க்கு மாற்றாக விரைவில் இயற்றப்படவிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் குழந்தைகளை பிரம்பால் அடிப்பது கிரிமினல் குற்றமாக்கப்படலாம் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரோஹாணி அப்துல் கரிம் கூறினார்.

மலேசியாவில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கு பிரம்படி கொடுப்பது வழக்கமானது என்றாலும், நாடு அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவது அவசியமாகிறது என்றார் அமைச்சர்.

“குழந்தைகளுக்கு பிரம்படி கொடுப்பது நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்றாலும், நாம் குழந்தையின் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தப்படி (சிஆர்சி) செயல்பட வேண்டியுள்ளது. சிஆர்சி இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறது”, என்று அமைச்சர் இன்று கூறியதாக உத்துசான் ஓன்லைன் தெரிவிக்கிறது.

இக்குற்றத்திற்கு முன்மொழியப்படவிருக்கும் தண்டனை என்ன என்பதை ரோஹாணி தெரிவிக்கவில்லை.

பள்ளி மாணவர்களை காலணியால் அடிப்பதையும் கடுமையான கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்.