உள்ளூர் மன்றங்களுக்கான தேர்தல் இன்னொரு மே 13 இனக் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள எச்சரிக்கை அவரது “தனிப்பட்ட கருத்து” ஆகும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
உள்ளூர் மன்ற தேர்தலுக்கான அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பக்கத்தான் ரக்யாட் முறையாக விவாதிக்க வேண்டும் என்றாரவர்.
இது நாளை நடைபெறவிருக்கும் பக்கத்தான் தலைமைத்துவ கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
“அவர் (ஹாடி) வெளியிட்டிருந்த அறிக்கை அவரது தனிப்பட்ட கருத்து ஆகும்”, என்று அன்வார் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக பெற்ற தகவல் ஹாடி புதிதாக ஒரு கல்யாணம் பண்ணினானே அந்த பெண் நஜிப்க்கு சொந்தகாரியாம் ஆகையால் ஹாடிக்கு ஏறி பெண் ஆசை கொண்டு உம்நோவுக்கு ஆதராவாக அறிக்கை விட்டு வருவதாக PAS நண்பர்களே சொல்கிறார்களே இதற்க்கு பதில் என்ன கூற போகிறான் பித்தன் ஹாடி . pas will die totally next election
மே 13-சொல்லியே தங்களின் கையால் ஆகாத தனத்தை பறைசாற்றும் அறிவிலிகள். கென்னெடி 2 கருப்பு இனமானவர்ககுக்காக 14000 ராணுவ வீரர்களை அந்த பல்கலை கழகத்திற்கு அந்த மாகாண கவர்னரைரும் பொருட் படுத்தாமல் நேர்மைக்கும் நியாயத்திற்கும் அனுப்பிவைத்து தன்னுடைய கடமையை நிலை நிறுத்தினார். அது தலைமைத்துவம் ஆனால் இங்கு? வேண்டும் என்றே பிள்ளையை கிள்ளிவிட்டு தாலாட்டும் ஈன ஜென்மங்கள். கேடு கெட்ட இனவெறியர்கள். இதெல்லாம் எங்கு இந்த அறிவிலிகளுக்கு புரியும்–எல்லாமே இன அடிப்படையில் தகுதி தரமின்றி செயல் பட்டால் என்ன நடக்கும்?
இத்தனை ஆயிரம் காவல் ராணுவம் எல்லாம் எதற்கு? எதை பிடுங்க? நியாயத்திற்கும் நீதிக்கும் வேலை செய்யாமல் அரசியல்வாதிகளின் எடுபிடி வேலை செய்து மக்களின் பணத்தை வீணடிக்கும் வீரர்களா இவர்கள்?
என் தாய்த்தமிழ் கென்னடியைப் பற்றிய தகவலைத் தந்து கென்னடியின் உயரிய பண்பை புதிய தலைமுறை அறிந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி. இது போன்ற உயரிய செய்திகளைப் பதிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட கருத்தை சொல்வதானால் அதைச் சொல்லும்போதே வெளிப்படுத்திட வேண்டும். பிறகு சப்பைக்கட்டு கட்டுவதெல்லாம் மக்களை முட்டாளாக நினைப்பதாகும். அன்வார் ஒரு சராசரி அரசியல்வாதியே. தன் புதல்விக்கு உள்ள தைரியமும், வெளிப்படையும்கூட அன்வரிடம் இல்லாதிருப்பது வருத்தமே!
நல்லதொரு கூட்டணியாக அமைந்த பக்காத்தான், இப்போது திசை தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. காரணம், சுயநலவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், குழி தோண்டுபவர்களும் நிரம்பி வழிந்துவிட்டனர். அவர்களது சண்டை சச்சரவுகள் வெளியே தெரியவில்லை, அவ்வளவுதான். லிம் கிட் சியாங், அன்வார், ஹாடி அவாங், இவர்களெல்லாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் பக்காத்தான் உருப்படும்.