ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), சமூக வலைத்தளத்தில் கிள்ளான் ஆலய-எதிர்ப்பு விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டிருப்பது இந்து சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது.
அந்த வலச்சாரி அமைப்பைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கத் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“எதற்காக இஸ்மா வேண்டுமென்றே இந்துக்களை ஆத்திரப்பட வைக்கிறது?”, என்றவர் வினவினார்.
இதன்மீது செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்போவதாக பாரதிதாசன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கிள்ளான் சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தைக் காண்பிக்கும் 2013ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காணொளியை இஸ்மா மீண்டும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அந்தக் காணொளியில், நிகழ்ச்சியுரையாளர் சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தைச் சுற்றுலா கவர்ச்சி மையமாக்கும் திட்டம் இருப்பதாகவும் அத்திட்டத்தால் ஓர் அரச நகரம் என்ற கிள்ளானின் மதிப்பும் மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற தோற்றமும் கெடும் என்று கூறுகிறார்.
இன விவகாரத்தை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தால்தான், மலாய்க்காரர்களின் ஆதரவோடு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது அம்னோவின் திட்டம். ஆக, இவையெல்லாம் அம்னோவின் சதிநாச வேலைகள் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மலேசியா இந்து சங்கம் உங்களை தேடி கொண்டு இருக்கிறோம். உங்கள் குரலுக்காக காத்திருக்கிறோம்.
இது என்ன தைப்பூச பரிசா?
மலேசிய ஹிந்து சங்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது !!!!! இதத்க்கு மோகன் சான் என்ன சொல்ல போகிறார் ஒரு மலைசியன் ஒரு ரிங்கிட் என்னவாயிட்று பணம் கொடுதவரில் நானும் ஒருவன் சுங்கை பட்டாணி பட்டாணி தைப்பூச திரு விழாவில் நான்கு வருடம் முன் அவரிடம் 12 ரிங்கிட் அவரிடம் வழங்கினேன் அவர் கைப்பட எனக்கு ராசீது கொடுத்தார் வருடம் ஒருமுறை கோலாலம்பூர் என் வீட்டுக்கு கடிதம் அனுப்புவாதாக சொன்னார் இது வரை பதில் இல்லை ,இப்பொழுது என்னிடம் ரசீது இல்லை திருடர்கர் என் வீட்டில் புகுந்து திருடியதில் ரசிதும் போய்விட்டது .அவரை நேரடியாக சந்தித்து பேசவும் தயார் .அவர்கள் அலுவகலத்தை சில முறை தொடர்பு கொண்டும் சரியான பதில் கிடைக்க வில்லை ,அந்த வசூல் என்னவாயிட்று ?????????????????????????
அரசியலை இதில் இழுத்து முடிச்சு போடா வேண்டாம் . எந்த சங்கம் அல்லது ஒருவனோ மதத்தை பற்றி பேசுகிறானோ அவை பற்றி போலீசில் புகார் செய்வோம். அதை விட்டு விட்டு அரசாங்கதை குறை குறி வந்தால் வேலைக்கு ஆகாது. மலேசியா ஹிந்து சங்கம் எங்கே போய்விட்டது ….அதை முதலில் அதை கேளுங்கள். சும்மா அரசாங்கம் மேல் பலி போடாதிர்கள். கண்டவன் கண்ட படி பேசுவான் அதை திரித்து பேச வேண்டாம். இன்று நேட்ட்றல்ல இந்த மாறி விஷயம் நடந்தது. எடஹி பேசி நாளும் சற்று யோசித்து பேச அல்லது எழுத வேண்டும். நான் ஒரு முன்னால் ராணுவ இருந்தவன். கொமுனுஸ் கலயத்தில் கட்டுக்குள்ளே பணியாற்றியவன் ….தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே
அரசியலை இதில் இழுத்து முடிச்சு போடா வேண்டாம் . எந்த சங்கம் அல்லது எவன் ஒருவனோ மதத்தை பற்றி பேசுகிறானோ அவனை பற்றி போலீசில் புகார் செய்வோம். அதை விட்டு விட்டு அரசாங்கதை குறை குறி வந்தால் வேலைக்கு ஆகாது. மலேசியா ஹிந்து சங்கம் எங்கே போய்விட்டது ….அதை முதலில் அதை கேளுங்கள். சும்மா அரசாங்கம் மேல் பலி போடாதிர்கள். கண்டவன் கண்ட படி பேசுவான் அதை திரித்து பேச வேண்டாம். இன்று நேட்ட்றல்ல இந்த மாறி விஷயம் நடந்தது. எதை பேசி நாளும் சற்று யோசித்து பேச அல்லது எழுத வேண்டும். நான் ஒரு முன்னால் ராணுவ வீரனாக இருந்தவன். கொமுனுஸ் கலயத்தில் கட்டுக்குள்ளே பணியாற்றியவன் ….தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே…டதோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் ஒரு கோயில் மணி அட்டிக குடாதென்று சொன்னார் மறந்து விட வேண்டாம்
isma மட்டும் இல்லை இந்த முஸ்லிம்கள் மற்ற சமயங்களை மதிப்பதே இல்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே இவர்களை வேரூன்ற விட்டு இருக்கக்கூடாது.
கோவிலை உடைத் ததற்காக பலனை அவர்கள் ஏற்கனவே அனுபவித்தார்கள்.மீண்டுமா ?.கிளப்புங்கள் உங்களின் அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது.
பெர்காசவையும், இஸ்மாவையும் கண்ணிருந்தும் குருடனைப் போல் காணாது, வாழ வெட்டியாக இருக்கும் ஆளும் கட்சியின் நோக்கம் இவ்வாறு தறுதலைகளை வளரவிட்டு அதனூடே இன தூவேச ஆபத்து இருக்கு என்று சொல்லி மீண்டும் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஒத்த சட்டத்தை கொண்டு வருவதேயாம். இதில் என்ன ஒளிவு மறைவு இருக்க வேண்டி இருக்கு. .
சிங்கம் கர்ஜிக்க தொடங்கி விட்டது. ஆதிக்கத்தில் உள்ளவர்கள் விளையாடும் விளையாட்டு. பிள்ளையும் கிள்ளுவது & தொட்டிலையும் ஆட்டுவது. . எங்கு போனது “sediction act” ? ஒளிந்து கொண்டதா? முதலில் மற்ற சமய நம்பிக்கைகளை குறை சொல்வர்களின் நாக்கை அறுக்க வேண்டும். இதுதான் “”Satu Malaysia” வா.? ரொம்ப நல்லாஇருக்கு ! அடுத்த தேர்தலில் “ISMA யை பார்க்கலாம்.
மஇகா தன்னை முதலில் பலம் படுத்தி கொண்டு இருக்கிறது. மீண்டும் எழுந்து நிக்கும் ! பேசும்! . காத்திருப்போம் சகோதரர்களே!
.
போடா
சகோதரா ,இது ஆக்க செயலின் வெளிப்ப்பாட அல்லது கோபத்தின் குமுறலா? உண்மைகள் பல வேளைகளில் சுடும்.
இஸ்மாவையும் பெர்காசாவையும் ஊட்டி ஊட்டி வளர்ப்பதும் அவர்களுக்கு தட்டிக் கொடுப்பதும் அரசாங்கம் தான் என்றால் பலருக்கு கோபம் வரும், ஆனாலும் அதுதான் உண்மை. நீங்கள் செந்தூல் போலிஸ் என்ன…ஐ.நா வில் புகார் செய்தால் கூட அது கிடப்பில் தான் போடப்படும். காரனம் நமது ‘ஒற்றுமை’ நாம் மட்டும் ஒற்றுமையாக இருந்தால் ‘அவர்கள்’ கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்பது வேறு விஷயம். முதலில் எட்டப்பர்கள் மத்தியில் ஆலயத் தலைவர் இப்படி பேசியது சரியா? சரி தான் என்றால் மேல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவில் – தமிழ்நாட்டில் கூட எடுபடாது – கண்டனத்துக்கு உள்ளாகும். இதை உணர்ந்து – நமது எல்லையை உணர்ந்து – அதை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலே நாம் எவ்வளவோ நன்மை அடையலாமே…பொங்க வேண்டியதற்கெல்லாம் பொங்காமல் விட்டி விட்டு ஆடு புழுக்கைப் போட்டதற்கு அரிவாளைத் தூக்குவதா?
“நீங்கள் ஒருவனுக்கு குழி பறித்து கொண்டிருந்தால் ; உங்களுக்கு பின்னால் ஒருவன் மண்ணை வாரிக்கிட்டு இருப்பான்” என்பதை அறியாத எருமைகளே !!! இங்கு கோயில் கூடாது என்கிறீர்கள், ஆனால் உலகளவில் ISIS போராளிகள் சவுதியில் உள்ளது முஸ்லீம்களின் புனித தளம் அல்ல, அதை தகர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
முதலில் சவுதியில் உள்ள உங்களுடைய புனித தளத்தை காப்பாற்றி கொள்ளுங்கடா!!!
அம்னோ அரசின் கை கூலிகல் இந்த isma அமைப்பு.அதே போல் PERKASA அம்னோவின் கை கூலிகள் தான். இந்த கை கூலிகளை அவ்வப்போது துண்டிவிட்டு இந்தியர்களையும், சீனர்களையும் மிரட்டி அடிபணிய வைத்து ஓட்டு வாங்கி ஆட்சியை நிலை நாட்டிக்கொல்லாம் என்பது அம்னோவின் அரசியல் தந்திரம்.இவர்களுக்கு எதிராக போலிஸ் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கா மாட்டார்கள்.ஆகவே தோழர்களே நமக்கு வேண்டியது ஆட்சி மாற்றமே.அம்னோவை வீழ்த்தினால் நமது உரிமைகள், அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு உறுதி செய்ய முடியும்.இந்தியர் ஒன்று இணைத்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை முதலில் நம்புங்கள்.நம்மால் கண்டிப்பாக முடியும்.மாறுவோம்.மாற்றுவோம்.முன்னேறுவோம் வாரீர் அருமை உடன்பிறப்புக்களே.
இது போன்ர திசை திருப்பும் செயல்கள்லில் மயங்கி விட வேண்டாம் . சிலான்கூரில் மக்கள் கூட்டனி இந்தியர்களுக்கு என்ன ச்ய்கிரதேன்ரும் கவனி paarati
அருமையாக சொன்னார்கள். சிங்கமும் தெனாலியும்.
தன வினை தனி சுடும்
இதுகாறும் தேசிய முன்னணி ஆட்சியில் கணக்கில் அடங்கா விஷயங்களை இழந்து 3ம் தர சமுகமாக வாழ்கிறோம் . ஒரே ஒருமுறை மக்கள் கூட்டணிக்கு வாய்ப்பு கொடுக்க ஏன் வலிக்கிறது? இதை சொன்ன்னால் சிலருக்கு கோபம் வருகிறது! உணர்ச்சி வெளிப்பாட்டை குறைத்து அறிவு பூர்வமாக சிந்திப்போம். பயப்பட ஒன்றுமில்லை. வல்லவன் ஒரு நாள் நிச்சயமாக வெல்வான் சகோதரர்களின் ஆதரவோடு !
எனது தேசிய மலேசிய மணிமன்ற சகோதரர்களும் எனது மலேசிய இந்து இயக்க சகோதரர்களின் குரலை கேக்க ஆவலாக இருக்கிறது ?
அறிவு… நீங்கள் வெறும் அறிவு அல்ல அறிவுக் கொழுந்து. இதையே தான் நானும் சொல்லி கொண்டிருக்கிறேன். இதுவரை 10 முறை தேர்தலில் வாக்களித்திருக்கிறேன். அத்தனை முறையும் எதிர்க்கட்சிக்குத்தான்… 8 முறை தோற்றார்கள். அடுத்த முறை வென்றார்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். 10-வது முறையும் வென்றார்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்கள். 2008 முதல் இங்கே சிறப்பான ஆட்சிதான்…ஓரினத்துக்கு மட்டும் அல்ல மூவினத்துக்கும் தான். எனவே மத்தியிலும் ஒரு வாய்ப்புக் கொடுத்தப் பார்ப்பதில் தப்பில்லையே..சில மாநிலங்களை இழந்தும் கூட பாரிசானுக்கு சிறுபான்மையினரை ஓரங்கட்டக்கூடாது, சிறுமைப்படுத்தக் கூடாது என்ற புத்தி வரவில்லை. இனியும் வராது. எனவே மாற்றம் நமது கைகளில்…மாற்ற வேண்டியது நம் கடமை.