அரச ஆகாயப்படை விமானி மேஜர் ஜைடி அஹ்மட், இராணுவ நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்குக் கீழ்ப் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டிருக்கிறார்.
13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியதற்காக ஜைடி பணிநீக்கம் செய்யப்பட்டார். அதை அடுத்து அவருக்குக் கீழ்ப் பணியாற்றிய பிளைட் சார்ஜெண்ட் ஜமால் இப்ராகிம்,46, ஏர் சர்ஜெண்டாக பதவி இறக்கப்பட்டார்.
ஜமாலும் ஜைடியுடன் சேர்ந்து ஆயுதப் படை மன்றத்தின் அனுமதியின்றி ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.
“ஜனவரி 20-இல் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 21-இல் அவர் எனக்குத் தெரிவித்தார்”, என ஜைடி கூறினார்.