சரவாக் மாநில அரசு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறும் அறிவுரையைக் கேட்டு மாநிலத்தில் மெகா அணைக்கட்டுகள் கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும்.
நேற்று மகாதிர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய சரவா ஆறுகள் பாதுகாப்பு இயக்கம்(SAVE Rivers), ராட்சத அணைக்கட்டுகள் சூற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வுக்கும் கேடு செய்கின்றன என்று கூறியது.
சேவ் ரிவர்ஸ் இயக்கம் சுதேசி நிலங்களைப் பாழ்படுத்தும் அணைக்கட்டுகள் கட்டுவதை எதிர்க்கும் பல என்ஜிஓ-களின் கூட்டமைப்பாகும்.
கூச்சிங்கில், அனைத்துலக எரிபொருள் வாரத்தையொட்டிய நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்திய மகாதிர், மாநில அரசு மின்சார உற்பத்திக்காக ராட்சத அணைகள் கட்டும் அதன் சர்ச்சைக்குரிய கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆஸ்தியா, ஜெர்மனி போன்ற நாடுகள் செய்துள்ளதுபோல் சிறிய அணைக்கட்டுகளை நிறைய கட்டலாம் என்றாரவர்.
மகாதிரின் அறிவுரைக்கு சரவாக் மாநில அரசு செவிசாய்க்க வேண்டும் என சேவ் ரிவர்ஸ் தலைவர் பீட்டர் கல்லாங் கேட்டுக்கொண்டார்.
கேட்டு நாசமாபோங்க .
இந் நாட்டின் இன்றைய நிலைமை எல்லாம் இந்த காகாதிமிறினால் தான் இவன் தான் இதை ஆரம்பித்து நட்டு தண்ணீர் விட்டு ஆலமரமாக்கினான்- அதனால் தான் இதை வெட்டுவது அவ்வளவு சுலபமல்ல.