2014-உடன் ஒப்பிடும்போது 2015-இன் முதல் மூன்று வாரங்களில் டிங்கிக் காய்ச்சல் கண்டவர் எண்ணிக்கை 65 விழுக்காடு கூடியிருக்கிறது.
இக்காலத்தில் 8,502 பேருக்கு டிங்கிக் காய்ச்சல் கண்டதாகவும் 20பேர் அந்நோயால் இறந்தார்கள் எனவும் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
2014-இன் முதல் மூன்று வாரங்களில் எழுவர் மட்டுமே அந்நோயால் இறந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
டிங்கி நோய் பெரும்பகுதி -80 விழுக்காடு- வீடுகளிலிருந்துதான் பரவுகிறது என்பதால் வீட்டில் இருப்போரும் சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சுப்ரமணியம் தெரிவித்தார்.
“வீடுகளில் பாதுகாப்புக்காகக் காலை 6-இலிருந்து 8.30 வரையிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 வரையிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வையுங்கள்”, என்றாரவர்.