பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 மீதான முக்கிய அறிவிப்பு கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பைச் செய்வதற்காக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை புத்ரா ஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று பிற்பகல் மணி 3.30-க்கு செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருந்தது. ஆனால், அது “எதிர்பாராத காரணங்களால்” இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்எச்370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 ஆள்களுடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போனது.
அது என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.
அது … மாட்டுமே தெரியும் அவனை கேளுங்கள்