காணாமல் போய்விட்ட மலேசிய ஏர்லைன்ஸ் பயணம் எம்எச்370 இல் பயணித்த 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது என்று சிவில் விமான இலாகா இன்று ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்தது.
இன்று மாலை இதனை ஆர்டிஎம்1 நேரடி ஒளிபரப்பில் டிசிஎ தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான் அறிவித்தார்.
“பயணம் எம்எச்370 ஒரு விபத்து என்று அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்”, என்று அவர் கூறினார்.
ஆனால், காணாமல் போன அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வது சிரமானதாக இருக்கும் என்றாலும், அவர்கள் தங்களுடைய வழக்கமான நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது அவசியமாகும் என்று அஸாருடின் கூறினார்.
MH 370 விமானத்தை கண்டு பிடிக்கவே இல்லை, அதற்குள் அதில் பயணித்த 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக நீங்கள் கூறுவதை எப்படி நம்புவது ???
அந்த விமானத்தை நீங்களே ISIS போராளிகளுக்கு தாரை வார்த்து விட்டு, 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கூறி இருக்கலாம் அல்லவா ???
ஏனென்றால், அல்தாந்துயா மலேசியாவிற்குள் வந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை, ஆனால் மலேசியாவில்தான் C4 (அதுவும் தற்காப்பு அமைச்சு பாதுகாப்பகத்தில் இருந்த வெடிகுண்டு) வெடிகுண்டை வெடிக்க வைத்து படுகொலை செய்யப்பட்டர் என்று உலகுக்கு நிருபித்துல்லோமே.