மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கேட்டு அரசாங்கம் செய்திருந்த கோரிக்கையை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டதே என்றும் அது தீர்ப்பளித்தது.
பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கும் அந்த அமைப்பின் இயக்கக் குழு உறுப்பினர் 14பேருக்கும் எதிராக அரசாங்கம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்க இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஜான் லூயிஸ் ஓ’ஹாரா, முன்னாள் இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்காகவும் தாக்கப்பட்டதற்காகவும் ரிம21,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், வழக்குச் செலவுகளுக்காக வொங்குக்கு ரிம30,000 கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.
நீதிதான் வெல்லும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஒரு நாள் தர்மம் வெல்லும்
கவலை படதே சகோதரா ! எல்லாமே நன்மையில் முடியும்!
ஒரு நாள் மக்கள் …