டிவிட்டரில் மலேசிய விமான நிறுவனமான எம்எச்370 பற்றிப் பதிவிட்டிருக்கும் ஒரு பதிவாளர்மீது ஆத்திரமடைந்துள்ளார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்.
அவரை அடையாளம் கண்டு விசாரிக்குமாறு அவர் போலீஸ் சைபர் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் டிவிட்டரில் இட்டிருந்த பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த @ollie_mollie என்பார் “…அது ஒரு விபத்தல்ல, சதி”, என்று குறிப்பிட்டிருந்ததுதான் காலிட்டின் ஆத்திரத்துக்குக் காரணம்.
அந்த டிவிட்டர் பயனரின் பதிவு “கெட்ட நோக்கம் கொண்டது” என்றும் “சினம் கொள்ள வைக்கிறது” என்றும் காலிட் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறினார்.
“நாங்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற முயன்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு எம்எச்370-க்கு என்னவாயிற்று என்று தெரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். மடத்தனமாக உளறி வைக்கக்கூடாது”, என்று காலிட் கூறினார்.
இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை போலீஸ் எம்சிஎம்சி-இடம் ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது.
இதனிடையே. இதை எழுதும் நேரத்தில் குறிப்பிட்ட டிவிட்டர் பதிவும் நீக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் உங்களுடைய அறிவுக்கு எட்டிய அபிமானத்தை தெரிவித்துள்ளீர்கள். அதுபோல் ” @ollie_mollie ” என்பவர் அவருடைய அறிவுக்கு எட்டிய கருத்தை கூறி இருக்கிறார். அதில் என்ன தவறு ?
அவர் கருத்துப்படி எதுவும் நடந்திருக்குமா ? என்ற கோணத்தில் விசாரிப்பதை விட்டுவிட்டு, ஏன் ஆத்திர பட வேண்டும் ???
நீங்கள் உண்மையைத்தான் கூறி இருக்கிறீர்கள், என்றால்
எங்கே ??? எப்பொழுது ??? மோதி விபத்துக்குள்ளானதா ??? இயந்திர கோளாறினால் விபத்துக்குள்ளானதா ??? மனித தவறுகளினால் விபத்துக்குள்ளானதா ??? என்பதற்கு விளக்கம் தரும்வரை, இப்படிப்பட்ட மாற்று குருத்துக்கள் தவிர்க்க முடியாதாகும்.
ஒன்றா ??? இரண்டா ??? 239 உயிர்கள்யாயிற்றே !!!
இதுக்கெல்லாம் ஆத்திர படுவான். ஒருத்தி செத்துட்டா. அவள் ஏன் செத்தால்ன்னு தெரியாதாம். அது தானடா உன் வேலை. உனக்கு எதுக்கு சம்பளம் தெண்டமா. நிங்கதா அவனுங்க ரெண்டு பேரையும் கேட்கலையே. நீயெல்லாம் போலிஸ் தலைவன்.
இந்த விமான விபத்து இன்னும் மர்மமாகவே இருக்கு. இன்று வரை எந்த அதிகாரியோ அல்லது மந்திரிகளோ பொறுப் ஏற்க்க்கவுமில்லை அதுபற்றி எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. ஏன்?
கலித் அவர்களே ஏன் ஆத்திரம்?குறையை அல்லது உண்மையை எடுத்து சொல்ல மக்களுக்கு உரிமை உண்டு .உண்மை சொன்னால் யார் என்ன சொல்வது ? உண்னை போல் ஒரு முட்டாள் போலீஸ் படைத் தலைவர் என்ன செல்வது .
போலீஸ் தலைவருக்கு கோபம் வருவதில் வியப்பொன்றுமில்லை. அனைவருடைய கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பக்குவம், நம் நாட்டு தலைவர்களுக்குக் கிடையாது. பெரும்பாலோர் அரை வேக்காடுகள்.
குகன், தியோ பெங், அல்தான்துயா போன்றவர்களின் மரணம், அவர்களே அவர்களை தாக்கி கொண்டு செத்து இருக்கலாம் என்று ஒருவர் சொல்லும்போது, ஏன் இந்த போலிஸ் காரர்களுக்கு கோவம் வரலை ?
போலிஸ் விசாரித்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. கிடைக்கப்போவதும் இல்லை என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர் போலும். மர்மத்தின் காரணத்தை இப்போது மக்களே விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள் போலும். இதில் என்ன தவறு இருக்கிறது????
இது தவறல்ல, போலிஸ் தலைவர் செய்வதுய் தவறு
அமெரிக்கா நிலாவில் கால் வைத்ததா இல்லையா என்று இன்று வரை சர்ச்சையில் உள்ளது. சில அறிவியலாளர்கள் 303 தடயங்கள் என்ற படம் எடுத்து, அமெரிக்கா காட்டும் நிலவில் தரையிறங்கிய ஒலியும் -ஒளியும் படம் போலியானது என்று நிருபித்துள்ளனர். அப்பொழுது இருந்த அமெரிக்கா அதிபர் JF .KENNEDY யும் அன்றைய கவர்னரும், இரண்டாம் தவனை அரசியலுக்காக, இந்த துரோகதிர்க்காக, ஒரே ஒரு புள்ளட்டால் இருவரும் கொள்ள பட்டனர் என்று ஒரு theory உள்ளது. JF .கென்னெடி தலையை துளைத்து கொண்டு சென்ற தோட்டா, கவர்னரின் இதயத்தையையும் துளைத்தது. அதை விட தங்க முடியாதா துயரம் என்ன என்றால் , 2010 NASA வசம் உள்ள “நிலவில் தரையிறங்கிய ஒலியும் -ஒளியும் படம்” தானாகவே அழிந்து விட்டது என்று NASA அறிவித்தது. அப்படி என்னிடமும் ஒரு theory இருக்கிறது. MH 370 விமானம் காணாமல் போவதற்கு முதல் நாள் அன்வார் அவர்களுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் குதர்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை தருகிறது. இங்கிருந்து என் கதை ஆரம்பமாகிறது. இரண்டு வாரம் கழித்து MH 370 kargo லிஸ்ட் MAS அகப்பக்கத்தில் (system) இருந்து மறைகிறது. இங்கே என் கதை முடிகிறது… நடுவில் என்ன நடந்ததுதான் என்பது என் யூகம். சொன்னால் நான் காலி !
ஆத்திரம் கொண்டு என்ன பயன்?. பொது மக்களும், விமான போக்கு வரத்து துறையில் இருக்கும் நிபுணர்களும் கேட்கும் கேள்விக்கு மலேசிய வான் போக்கு வரத்து துறையிடம் இருந்தும், மலேசிய இராணுவத்திடம் இருந்தும், போலிஸ் துறையிடம் இருந்து தகுந்த விளக்கங்கள் இல்லையே!. அப்புறம் ஆருடங்களும், சந்தேகங்களும் ஏன் வராது?. சந்தேகங்கள் ஏற்பட வழி வகுத்தது இந்த நிறுவனங்களே. ஒரு மந்திரியானவர் விமானம் கடலில் விழுந்த இடம் 99% உறுதியாயிற்று என்று கூறி இன்றுடன் 5 மாதங்கள் ஓடி விட்டன. மீதம் இருக்கும் 1% சந்தேகத்தை நீக்க இவ்வளவு நாள் என்றால் பாதிக்கப் பட்ட பயணிகளின் குடும்பங்கள் கதறாத?. அவர்களின் கதறல் மேற்கூறிய அனைவரையும் உண்மைப் பேச நமக்கும் மீறிய சக்தி ஒன்று செயல் படுத்தும். உள்ளதை மறைக்க தங்களால் முடியாது என்பதனால் அமெரிக்காவின் கூட்டுரவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்த்துக் கொள்ள வைத்தது நல்ல நாடகம். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் விமானம் விழுந்த இடம் கண்டு பிடிக்கப் பட்டு விட்டது என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்தது எப்படி?. விழுந்த விமானங்களின் உடைந்த பாகங்கள் இந்தோனேசியா தீவுகளில் கரை சேர்ந்தது அல்ல சேரும் என்ற வதந்தியை ஆஸ்திரேலியாவில் இருந்து கிளப்பி விட்டது யாரு?. விமானம் காணமல் போய் 4 மணி நேரம் கழித்து தேடும் பணியை துவக்கியது ஏன்?. விமானம் அந்தமான் கடலுக்குச் சென்று அங்கிருந்து தென் இந்திய சமுத்திரத்தை நோக்கிச் சென்றது மலேசிய இராடார் கருவியில் பதிவானது உண்மையானால், முதல் ஒரு வாரம் தென் சீனக் கடலில் விமானத்தை தேட உத்தரவு போட்டது யாரு?. இதற்கெல்லாம் பதில் இல்லை எனும்பொழுது ஆருடங்களை மக்கள் நம்ப வேண்டிய கட்டயத்திர்க்குள் இட்டுச் சென்றது யார் குற்றம்?. ஆத்திரம் புத்திக்கு மட்டு என்பதை காவல் துறை தலைவர் உறுதி செய்ய விரும்புகின்றாரோ?.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். மங்குஸ்தீன் பழங்கள் காய்க்கும் பருவம் இல்லாத காலத்தில் யார் மங்குஸ்தீன் பழங்களை ஏற்றுமதி செய்தது?. அவ்வாறு ஏற்றுமதி செய்த நிறுவனம் எவ்வொரு அறிக்கையையும் வெளிடக் கூடாது என்று உத்தரவு போட்டது யார்?. இப்பொழுது விபத்து என்று காரணக்காரியம் கூறியாகி விட்டதால் அங்கே விசாரித்த உண்மைகளைச் சொல்லாமே. இரண்டு பேர் இறுதி நேரத்தில் விமானத்தில் ஏற உதவியர்களில் இருந்து அனைவரும் குற்றம் அற்றவர்கள் என்று மேற்போக்காக விசாரணை அறிக்கையை முன் வைத்தது யார் குற்றமோ?. இதுவும் கென்னடி சுட்டுக் கொள்ளப் பட்ட கதை போன்றதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விமானக் கதையிலும் சி.ஐ.எ. பின்னனனியில் இருக்கும் என்று மாமக்தீரே ஆருடம் கூறியது. அவரின் மீது சட்டம் பாயாதோ?.
க்ஹலிட் என்ற பெயர் உள்ளவனுங்க்கள எவனும் இப்பொழுது நம்புவதிள்ளயாமே இவன் என்ன கடவுளா ஆத்திரப்பட இவன் பொஞ்சாதியும் மகனும் அதுலே பயணம் செய்திருந்தால் இந்த புலத்தி க்கு வருட்டஹம் புரியும் ஒரு நாள் நீயும் நசிப்பும் போற பலனே காணாமல் போவது உறுதி இது உலக மக்கள் சாபம் கண்டிப்பாக நடக்கும் நடக்கணும் மற்றவன் என்றால் உனக்கு இழுக்கா பெப்…