புத்ரா ஜெயா பிப்ரவரி மாதம் ரோன்95-இன் விலையை லிட்டருக்கு ரிம1.62 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி.
இந்த விலை ரோன்95-இன் சந்தை விலையைப் பிரதிபலிப்பதாக ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“உதவித் தொகை வழங்கப்படுமானால் அதன் விலை ரிம1.32 ஆகும்”, என்றாரவர்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் அதற்கேற்ப ரோன்95 விலையும் பிப்ரவரி 1-இல் குறைக்கப்படும் என்ற ஊகங்கள் வலுத்து வருகின்றன.
புத்ரா ஜெயா ரோன்95-இன் விலையை ரிம1.63 ஆகவும் டீசலின் விலையை ரிம1.62 ஆகவும் நிர்ணயிக்கக் கூடும் என எண்ணெய்த் தொழில் வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
இப்போது ரோன்95-இன் விலை ரிம1.91. டீசல் விலை ரிம1.93.
இந்த பைப்பின் குழாயை பிடித்து உம்னோ வாயில் விடுங்கப்பா