ரிம 103 மில்லியன் செலவில் தொடங்கப்பட்ட ஜோகூர் போலீஸ் தலைமையகத் திட்டம் இன்று “கைவிடப்பட்ட” நிலையில் இருப்பது பற்றி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
பிகேஆர் தலைவர்கள் புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர் ஜிம்மி புவாவும், National Oversight and Whistleblowers அமைப்பின் இயக்குனர் அக்மால் நாசிரும் ஜோகூரில் அக்கட்டிடம் கட்டப்படும் இடத்துக்குச் சென்று வந்ததாகக் கூறினர்.
“ஜோகூர் பாருவில் அந்த இடத்துக்குச் சென்று பார்த்ததில் 2010-இல் தொடக்கப்பட்ட கட்டுமான வேலைகள் கைவிடப்பட்ட நிலையில்தான் உள்ளன”, என்று ஓர் அறிக்கையில் கூறினர்.
ஜோகூர் சட்டமன்றத்தில் அது பற்றிக் கேட்டபோது 2013-இல் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அக்கட்டிடம் கட்டி முடிக்கப்படுவதற்கு அமைச்சர்தான் பொறுப்பு என்பதால் அதன் இன்றையை நிலை பற்றி விளக்கமளிக்க ஜாஹிட் ஹமிடி முன்வரவேண்டும் என்றவர்கள் கேட்டுக்கொண்டனர்.
“அவர் அதைச் செய்யத் தவறினால் வேறு வழியில்லை, மேலும் பல விசயங்களை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்”, என்றவர்கள் கூறினர்.
“அதை உங்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை. நான் அம்னோவுக்குத்தான் விளக்கம் கூற கடமைப் பட்டிருக்கிறேன்! அவர்களிடம் கூறி விட்டேன்!” என்று சொன்னால்?
அஹா அருமையான பதில் சொல்லுவார் காத்திருங்கள் .
அமைச்சர் ஜாஹிட்டுக்கு குற்றம் காண்பதில்தான் ஈடுபாடு. மேம்பாட்டின் மேல் அல்ல.