பெப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து ரோன்95 இன் விலை ஒரு லீட்டருக்கு 21 சென்னும், டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 23 சென்னும் குறைக்கப்படும்.
நள்ளிரவு மணி 12 லிருந்து ரோன்95 மற்றும் டீசல் ஆகிய இரண்டும் ஒரு லீட்டர் ரிம1.70 க்கு விற்கப்படும்.
ரோன்97லின் விலை 11 சென் குறைக்கப்பட்டு ஒரு லீட்டர் ரிம2.00 க்கு விற்கப்படும்.
கச்சா எண்ணெயின் விலை உலக அளவில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் குறிப்பிடத்தக்க இந்த விலை குறைப்பு சாத்தியமாயிற்று.
இந்த விலை குறைப்பு நாட்டிற்கு நல்லது என்று துணை நிதி அமைச்சர் அமான் மஸ்லான் டிவிட் செய்துள்ளார்.
ஆனால், ரோன்95 இன் விலையை புத்ராஜெயா ரிம1.62 க்கு நிர்ணயிக்க வேண்டும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸ்சி ரமலி நேற்று கூறியிருந்தார்.
முன்பு எரிபொருள் விலை லித்தருக்கு 5 காசு உயர்ந்த உடனே ரொட்டி சானாய், தேநீர், மீகோரேங் முதல் அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும், வீட்டு விலையும் கிடு கிடு வென உயர்ந்தன..ஆனால் இப்போது லிட்டருக்கு 60 காசுகள் வரை எரிபொருள் விலை வீழ்ந்த பிறகும் கூட எந்தப் பொருளும் விலை குறையவில்லை. சம்மந்தப்பட்டவர்களும் கண்டுகொள்ளவில்லை. காரணம் என்ன புரிகிறதா மக்கா..? சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நமது பயனீட்டாளர் சங்கங்களும் முதலீட்டாளர்களின் சங்கங்களாக மாறிவிட்டன போலும்,,,!
ஏன் நண்பர் மதவக்க கேட்கணும் . நம்ம கேட்கலாமே. நம்ம பசிக்கு நாம் தானே சாபுடுனும்
சரி! சரி! இன்னும் ஒரு 8 காசைக் குறைத்து ரிம 1.62 காசா நிர்ணயத்து விடுங்களேன். ரபிஸ்சி சொன்ன பிறகு தானே குறைத்தீர்கள். அது மக்களுக்குத் தானே நன்மை பயக்கும். ரபிஸ்சிக்கு அல்லவே!
உண்மைதான்
பயனீட்டாளர் சங்கம் வெறும் பேருக்குத்தான். அங்கும் அரசியலும் இனவெறியும் உண்டு.
pkr rafizi குரல் கொடுக்கவிள்ளஎன்றால் BN இந்நேரம் மக்களை சுரண்டி எடுதிருப்பனுங்க்கோ