பாஸ் எம்பி: தேர்தலைப் போற்றுவதை நிறுத்துவீர்

 

Pas MPபாஸ் ஊராட்சி மன்ற தேர்தலை ஆதரிக்கவில்லை ஏனென்றால் அது நீதிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று பாஸ் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் அப்துல் நிக் மாட் கூறுகிறார்.

ஊராட்சி மன்ற தேர்தல் பற்றிய டிஎபி மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான சர்ச்சையில் சேர்ந்து கொண்ட அவர் இது தனிப்பட்டவரின் கருத்தல்ல. இது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான கொள்கை என்றார்.

தேர்தல்தான் ஜனநாயகம் என்பதை பாஸ் நம்பவில்லை. இதனை ஏற்றுக்கொள்ளாத பாஸ் கட்சி தலைவர் எவரும் கட்சியைப் புரிந்து கொள்ளவில்லை என்றாரவர்.

பாஸ் கட்சிக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியும். அது இஸ்லாத்தின் அகண்ட மற்றும் நியாயமான தத்துவத்திற்கு உட்பட்டது. அது சூழ்நிலைக்கேற்றவாறு மாறும் நீதிக்கான வழியைத் தேடாமல் நீதியை நிலைநிறுத்த முயல்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“நாம் ஜனாநாயகத்திற்கு முடிசூட்டி தேர்தலை அரசனாக்கியுள்ளோம். இதனை இஸ்லாம் தடைசெய்கிறது”, என்றாரவர்.