ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜேக்கி சான் அவரது ‘போலீஸ் ஸ்டோரி’படத்தின் படப்பிடிப்பைக் கோலாலும்பூரில் நடத்தியதுதான் அவருக்கு டத்தோ பட்டத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.
“மலேசியாவில் நிறைய ரசிகர்களைக் கொண்டுள்ள ஜேக்கி சான் மலேசியாவுக்கு அதிலும் கோலாலும்பூருக்கு நல்ல விளம்பரத்தைத் தேடிக் கொடுக்க முடியும். அதனால்தான் அவருக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
“பலர் அவர் நடித்த புகழ்பெற்ற படமான ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது என்பதை மறந்து விடுகிறார்கள்”, என தெங்கு அட்னான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜேக்கி சானுக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டதில் சிலருக்கு உடன்பாடு இல்லை.
அனைத்துலக அளவில் டத்தோ பட்டத்துக்கு என்ன மதிப்பிருக்கப் போகிறது. அதையே ஒரு மலேசிய கலைஞருக்கு வழங்கி இருந்தால் மிகப் பெரிய கெளரவமாக இருந்திருக்குமே என நடிகர் அப்ட்லின் செளகி கூறியிருந்தார்.
டான் ஸ்ரீ மற்றும் துன் பட்டத்தையும் சேர்த்து கொடுத்திருந்தால் இன்னும் நிறைய சினிமா தயாரிக்க அதிக தயாரிப்பாளர்கள் இந்நாட்டுக்கு வருவர் அல்லவா. நடிகர்களுக்கும் உம்மைப்போன்ற கோமாளிகளுக்கும் இந்நாட்டில் பஞ்சமா என்ன???
ஹ்ம்ம்ம்ம்…ஆனால் அந்த இனத்தவரை அமைதிப்படுத்தவே இந்தப் ‘பட்டம்’ அவருக்குத் தரப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. இன்னொன்றை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பு நம்மை குஷிப்படுத்த நம்ம சூப்ர ஸ்டாருக்கு ‘பட்டம்
தரப்படலாம்.
உலகத்திலேயே இது தான் ரொம்ப ரொம்ப முக்கியமான விசியம்