எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். அதேவேளை சிறைக்குச் செல்லவும் அவர் அஞ்சவில்லை. சிறைக்கு அஞ்சித் தப்பியோடப்போவதில்லை என்றும் அவர் உறுதி கூறினார்.
பிப்ரவரி 10-இல், கூட்டரசு நீதிமன்றம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது மேல்முறையீடுமீது தீர்ப்பளிக்கவுள்ளது.
பிரபல இஸ்லாமிய கல்விமான் ஷேக் யூசுப் அல் கர்டாபி, வெளிநாடு சென்று விடுமாறு அவருக்கு ஆலோசனை கூறினார். துருக்கித் தலைவர் ஒருவர் அந்நாட்டுக்கு வருமாறும் அங்கு அவருக்கு சமய ஆலோசகர் பதவி கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த பெர்மாத்தாங் பாவ் எம்பி அதற்கு உடன்படவில்லை.
“நான் பிறந்தது இங்கு, இதுதான் என் நாடு. விளைவு என்னவாக இருந்தாலும் இங்கிருந்தே தொடர்ந்து போராடுவேன். சிறைக்குச் செல்லவும் அஞ்சவில்லை. ஏற்கனவே எட்டாண்டுகள் அங்கு இருந்திருக்கிறேன்”. நேற்றிரவு, நெகிரி செம்பிலான் சிக்காமாட்டில் ரக்யாட் ஹகிமி நெகாரா (மக்களே நீதிபதிகள்) நிகழ்வில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
அதான் விடுதலை என்றாகி விட்டதே அப்புறம் ஏன் இந்த வீர வசனமெல்லாம். எல்லாம் நாடக மேடை, இதில் நீங்களெல்லாம் நடிகர்கள். நாங்களோ பார்வையாளர்கள்.
அன்வார் அவர்களே நீங்கள் இப்படி பேசினால் தான் bn னுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும் ,நீங்கள் விடுதலை என்று எல்லாருக்கும் தெரியும் ,bn காரர்களும் உங்களை பயமுறுத்தி கொண்டு தான் இருப்பார்கள் ,,இப்படி பேசினால் தான் பயம் இருக்கும் நீதியும் தர்மம் காக்கும்