ஆள்பார்த்துத்தான் வழக்கு தொடுக்கப்படுகிறது என்கிறார் ‘மிலோசுவாம்’ என்ற பெயரில் பதிவிடும் யூசுப் அல்- சித்திக். 2013 லாஹாட் டத்து ஊடுருவல் தொடர்பாக பதிவிட்டிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி அவர் இவ்வாறு கூறினார்.
தாம் பதிவிட்டதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு உத்துசான் மலேசியாவும் அதன் இணையதளத்தில் அதேபோன்ற கட்டுரைகளை வெளியிட்டிருந்ததாக யூசுப் தெரிவித்தார்.
“போலீஸ் நிலையங்கள் தாக்கப்படுகின்றன என்றால் போலீசார் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறும் ஒரே மாதிரியான செய்திதான்.
“அதற்கு மக்களைப் பயமுறுத்துவதாக மிலோசுவாம்மீது குற்றம் சாட்டும்போது, அதே விவகாரம் பற்றிக் கட்டுரை வெளியிடும் அரசாங்க- ஆதரவு செய்தித்தாளுக்கு எதிராக புகார் செய்யப்படாதது ஏன்?”. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு வினவினார்.
லாஹாட் டத்து ஊடுருவல்மீது கட்டுரை பதிவிட்டது தேச நிந்தனைக் குற்றம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு யூசுப்புக்கு ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்ற ஆணையைப் பெற்று அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு தம்மையும் தம்மைப் போன்ற பக்கத்தான் -ஆதரவு வலைப்பதிவர்களையும் மிரட்டிவைக்கும் தந்திரமாகும் என்று யூசுப்