தொழிற்சங்க தலைவர் ஒவ்வொருநாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

 

Rum90dayapology1இந்நாட்டு முதலாளிகள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கும் கடமையை மறந்து விட்டனர் என்பதைகெரித்தாப்பி தானா மலாயு பெர்ஹாட்டின் (கேடிஎம்பி) தலைவர் எலியாஸ் காடிர் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஆர்யுஎம்) தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் அவரிடம் ஒவ்வொரு நாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை உறுதிப்படுத்துகிறது.

தமக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தியதற்காக ஆர்யுஎம் தலைவர் அப்துல் ரசாக் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதனை அவர் முகநூல் மற்றும் “சுவாரா ஆர்யுஎம்” மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்று எலியாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் எரிச்சலடைந்துள்ள ஆர்யுஎம் தலைவர் அப்துல் ரசாக் இது ஓர் அர்த்தமற்ற செயல் என்று வர்ணித்தார்.

“முதலில் ஒரு வருடத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், பிறகு அது ஆறு மாதத்திற்கு குறைக்கப்பட்டது. இப்போது மூன்று மாதத்திற்கு. இது வாதமுறைக்கு ஒவ்வாத ஓர் அர்த்தமற்ற செயலாகும்”, என்று அப்துல் ரசாக் கூறினார்.

வேலையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவதற்காக கேடிஎம்பியின் தலைவர் எலியாசிடம் ஒவ்வொரு நாளும் மன்னிப்பு கோருவதை விட தாம் வேலை இன்றி இருப்பத்தைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார்.

மே2, 2012 இல் கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் பதவு விலகக் கோரி ஆர்யுஎம்மின் உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனர். Rum90dayapology3அப்போராட்டத்தில் களமிறங்கியதற்காக நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களில் அப்துல் ரசாக்கும் ஒருவர்.

கடந்த ஆண்டு நவம்பர் 20 லிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 96 தொழிலாளர்கள், அப்துல் ரசாக்கை தவிர்த்து, மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த 96 தொழிலாளர்கள் மன்னிப்பு கோர ண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படவில்லை என்று அப்துல் ரசாக் தெரிவித்தார்.

 

எம்டியுசி வன்மையாகக் கண்டிக்கிறது

 

கடந்த ஐந்து மாதங்களாக வேலையின்றி இருப்பதால், சிரமமாக இருக்கிறது என்று கூறிய அப்துல் ரசாக், “எனக்கு வேறு வழியில்லை. எனது சங்கம் நிலைத்திருப்பதற்காக நான் வாழ்ந்தாக வேண்டும். இது ஒரு போராட்டம். அலைகளுக்கு பயந்தால் கடற்கரையில் வீடு கட்டக் கூடாது”, என்று தமது நிலைப்பாட்டை அப்துல் ரசாக் தெளிவுபடுத்தினார்.

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸில் (எம்டியுசி) அங்கம் பெற்றிருக்கும் ஆர்யுஎம்மின் தலைவர் அப்துல் ரசாக் மீது கேடிஎம்பியின் எலியாஸ் காடிர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து எம்டியுசியின் நிலைப்பாடு பற்றி அதன் தலைமைச் செயலாளர் கோபால் கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது.

Rum90dayapology4கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் காடிரின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய கோபால் கிருஷ்ணன், “இது ஒரு வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்” என்று அவர் கூறினார்.

கேடிஎம்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தொழிலாளர்களுக்கு எதிராக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து அனைத்துலக தொழிலாளர் மன்றத்தில் (ILO) புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் காடிர் ஆர்யுஎம்மின் தலைவர் அப்துல் ரசாக் 90 நாள்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று இப்போது உத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் அந்த விவகாரத்தை எம்டியுசி மலேசிய மனிதவள அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லும் என்று கோபால் கூறினார்.