நேற்றிரவு பத்துமலை இருளில் மூழ்கியது

 

batuநேற்றிரவு மணி 8.53 லிருந்து நள்ளிரவு தாண்டியும் பத்துமலை இருளில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது.

தைப்பூச திருவிழாவைக் கொண்ட பத்துமலையில் குழுமியிருந்த பக்தர்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது அவர்கள் சற்றும் எதிர்பாராததாகும்.

தெனகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக பத்துமலை கோயில் குழு உறுப்பினர் என். சிவகுமார் கூறினார்.

டிஎன்பி இரு பெரிய ஜெனரேட்டர்கள் மூலம் அவ்விடத்திற்கு வெளிச்சம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

தைப்பூச திருநாள் விழாவில் இவ்வாறு நடந்திருப்பது இதுவே முதல் தடவை என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தைப்பூச விழாவில் கலந்துகொள்வதற்கான நிகழ்ச்சியும் இதனால் பாதிக்கப்பட்டது.

அஸ்மின் அலி இரவு மணி 8.15 க்கு அங்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் பேச விருந்த நிகழ்ச்சி இதனால் பாதிக்கப்பட்டது.

மின் விநியோகம் தடைபட்டதை தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அஸ்மின், இதனால் தைப்பூச விழா இங்கு பாதிக்கப்படாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.