QZ8501 ஏர் ஏசியா விமான விபத்து பற்றி விசாரணை நடத்தும் இந்தோனேசிய அதிகாரிகள், விமானி தம் இருக்கையைவிட்டு அப்பால் சென்றார் என்பதற்கோ தானியக்கக் கட்டுப்பாட்டு முறைக்கான மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்கிறார்கள்.
விசாரணையாளர்களுக்கு அணுக்கமான இரு வட்டாரங்கள் கேப்டன் இரியாந்தோ தம் இருக்கையிலிருந்து எழுந்து சென்று விமானத்தைக் கட்டுப்படுத்தும் கணினியில் மின் -ஓட்டத்தைத் தடுக்கும் கருவியை வெளியில் இழுக்கும் வழக்கத்துக்கு மாறான செயலில் ஈடுபட்டார் என்றும் அப்போதுதான் துணை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்தார் என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறியதாக இதற்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது.
“ராய்ட்டர்ஸில் அறிவித்ததுபோல் கேப்டன் தம் இருக்கையைவிட்டு எழுந்து சென்றார் என்பதைக் காண்பிக்கும் ஆதாரம் எதுவும் இன்றுவரை இல்லை”, என விசாரணையாளர்களில் ஒருவரான தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் எர்டாடா லானாங்காலே கூறினார்.
சேதாரம் பெரிது! ஆதாரத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம்!
ஆபிரகாம், சேதாரம் , ஆதாரம் , உங்கள் எழுத்து நடை சிம்பு அப்பா
போல் உள்ளது.