மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1960-களில் இருந்த நிலை இன்றில்லையே என்று வருத்தப்படுகிறார் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகம்மட் அரிப் முகம்மட் யூசுப். அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் சட்ட விரிவுரையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் பல்கலைக்கழகங்களின் கல்விச் சுதந்திரத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களின் ஒளி மங்கிவிட்டது என்றாரவர்.
இதன் விளைவாகக் கல்வி கற்பிக்கும் ஆர்வம் குன்றி பல்கலைக்கழகங்களின் தரமும் இறக்கம் கண்டிருக்கிறது.
கல்வியாளர்களுக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்லும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்திய முகம்மட் அரிப்,, பல்கலைக்கழகம், பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம்தான் பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது என்றார்.
“(கல்விச் சுதந்திரத்துக்கு) வரம்பு தேவைதான். ஆனால், நம்மைப் பொருத்தவரை வரம்புமீறிச் சென்று அறிவாற்றலைப் பெறும் நாட்டத்தையே முடக்கிப் போட்டு விட்டோம்”, என்றாரவர்.
பதவியில் இருக்கும்போது சொல்லியிருந்தால் உனக்கு அப்போதே ஆப்பு வந்திருக்கும்.. இறுதி மூச்சிக்கு துடிக்கும் வேளையில் பால் ஊற்றி என்ன பயன்??? எனிவெய்!! உண்மையை சொன்னதுக்கு நன்றி!!!!
ஐயா முன்னாள் நீதியரசர் அவர்களே, இப்படி ஆளுக்கு ஆள் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் எப்படி? முன்னாள் நீதிபதிகளுக்கு என்று (ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கென்று) ஒரு சங்கம் இருக்குமே…சட்டமும் நீதியும் தெரிந்த நீங்கள் அரசாங்கம் செய்யும் அக்கப்போர்களுக்கு எதிராக அந்த சங்கத்தின் மூலம் வழக்குத் தொடரலாமே…அதை விட்டு..விட்டு வாலைப் பிடிக்கறீங்களே சார்..
பதவியில் இருக்கும்போது சொல்லியிருந்தால் உனக்கு அப்போதே ஆப்பு வந்திருக்கும்.. இறுதி மூச்சிக்கு துடிக்கும் வேளையில் பால் ஊற்றி என்ன பயன்??? எனிவெய்!! உண்மையை சொன்னதுக்கு நன்றி!!!!